[உபுண்டு_தமிழ்]"extract-doubleclick-run" மூன்றே மூன்று படிகளில் உபுண்டுவில் தமிழ்!!

K. Sethu skhome at gmail.com
Wed Jan 17 20:31:48 GMT 2007


மயூரன்

6.10.1-beta1 க்கான எனது சோதனை, நிகழ்வட்டு இயக்கத்தில்.

install.sh கோப்பில் இரண்டு முறை சொடுக்கி நிறுவல் ஆரம்பித்தேன். Run in Terminal 
என்ற தேர்வுடன்.

பின்வரும் வழு அறிவிப்பு கண்டேன்:


> ....
> ......
> dpkg: dependency problems prevent configuration of language-pack-gnome-ta:
> language-pack-gnome-ta depends on language-pack-gnome-ta-base; however:
>  Package language-pack-gnome-ta-base is not installed.
> dpkg: error processing language-pack-gnome-ta (--install):
> dependency problems - leaving unconfigured
> dpkg: dependency problems prevent configuration of language-pack-kde-ta:
> language-pack-kde-ta depends on language-pack-kde-ta-base; however:
>  Package language-pack-kde-ta-base is not installed.
> dpkg: error processing language-pack-kde-ta (--install):
> dependency problems - leaving unconfigured
> ......
> .......
மேலும் 6.10.1 உடன் நாம் பார்த்தது போன்ற அறிவிப்பு:
> Setting up language-support-ta (6.10+20060922) ...
> Generating locales...
>  ta_IN.UTF-8... up-to-date
> Generation complete.
> * Reloading GNOME Display Manager 
> configuration...               * Changes will take 
> effect when all current X sessions have ended.
> invoke-rc.d: initscript gdm, action "reload" failed.

மேலே முதலில் குறிப்பிட்ட வழுவை நீக்க language-pack-gnome-ta-base, 
language-pack-kde-ta-base எனபவற்றை பொதியில் சேர்க்க வேண்டும்.

நிறுவுகையில் கடைசியில் முடியும் போது உடனே மீள ஆரம்பிக்கவோ அல்லது பின்னர் நீங்களே 
ஆரம்பிபதானால் cancel அமுக்குங்கள் என்பது போல வருமே - அவ்விடத்தில் நான் மீள ஆரம்பிக்க 
உள்ள தேர்வை அமுக்க அதன் பின்னரே அது முழு கணினியையும் மீள ஆரம்பிப்பதை அவதானித்தேன் - 
ஆக மீணடும் இன்னொரு நிகழ்வட்டு இயக்க சூழலில் மீண்டும் நிறுவி இம்முறை cancel என 
அமுக்கி, அதன் பின் ctrl+alt+backspace மூலம் மீண்டும் பயனர் கணக்கை ஆரம்பித்து சோதிக்க 
வேண்டியதாயிற்று.

மீள ஆரம்பிக்கையில் log out மட்டும் செய்வித்தால் போதாதா?

சோதனை இயக்கத்தில் வேறு பிரச்சினைகள் காணப்படவில்லை.

அடுத்த beta2 மேலதிக சோதனைகளை செய்வேன் - hard disk instalaations களில்

~சேது

On 01/17/2007 03:14 AM, மு.மயூரன் | M.Mauran wrote:
> extract, double click, run எனும் மூன்று படிமுறைகளில் வரைகலை 
> இடைமுகப்பினூடாக தமிழ் வசதிகள் அனைத்தையும் உபுண்டுவில் நிறுவித்தரத்தக்கவாறு 
> தபுண்டுவின் 6.10.2 பதிப்பு வடிவமைக்கப்பட்டு ள்ளது.
>
> install.sh கோப்பின் மீது இரண்டு முறை சொடுக்கினால் போதும். நிறுவல் ஆரம்பித்துவிடும்.
>
> இப்பதிப்பின் சோதனை வெளியீட்டினை இம்மடலோடு இணைத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் 
> சோதித்துப்பார்த்துவிட்டு கருத்துக்களை அறியத்தரவும்.
>
> இப்பதிப்பில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்.
>
> 1. மூன்று படிமுறைகளில் நிறுவத்தக்க எளிமையான வரைகலை இடைமுகப்பு
>
> 2. tamil-gtk2-im
>
> 3. க்னோம் இடைமுகப்பின் எழுத்துருவை serif 9 இற்கு மாற்றல்
>
> 4. இற்றைப்படுத்தப்பட்ட - language-pack-ta, language-pack-kde-ta, 
> language-pack-gnome-ta
>
> முடியுமானால் உபுண்டுவின் ஏனைய வகைகளில் இப்பொதியை சோதித்துப்பார்க்கவும் ( 
> kubuntu, xubuntu, edubuntu)
>
> தோழமையுடன்
>
> மு.மயூரன்
>
> -- 
> visit my blogs
> http://www.mauran.blogspot.com
> http://www.tamilgnu.blogspot.com <http://www.tamilgnu.blogspot.com> 
More information about the Ubuntu-l10n-tam mailing list