[உபுண்டு_தமிழ்]தபுண்டு இரண்டாம் பதிப்பிற்கான பணிகள்

Sethu skhome at gmail.com
Tue Jan 16 05:25:21 GMT 2007


மயூரன்

வாழ்த்துக்கள்

> கடந்த தபுண்டு ஏதாவது வழுக்களை கொண்டிருந்ததா/
>
> இதற்கு வரும் பதில்கள் தபுண்டுவின் எதிர்வரும் பதிப்பை சீரமைக்க உதவும்.


1. கடந்த தபுண்டு பொதியில் INSTALL.txt என்ற கையேடு கோப்பில் பின்வரும்
இரு அறிவுரைகள் உள்ளன.

sudo chmod 777 install.sh
./install.sh

இதில் முதல் வரி அவசியமா? ஏனெனில்  tar.gz பொதியை விரிவாக்குகையில்
install.sh கோப்பு எல்லாருக்கும் செயலிக்கச் செய்வதற்கு அனுமதியுடனே
வருகிறது. (ஆயினும் மேலதிகமாக அவ்வாறு கட்டளையை பயனர் கொடுப்பதால்
பாதிப்புக்கள் ஒன்றும் இல்லை - அதனால் விட்டு வைத்தாலும் பரவாயில்லை)

ஆனால் இரண்டாம் வரி பின்வருமாறு மாற்ற வேண்டும்:

sudo ./install.sh

பல பொது கோப்பகங்களில் உள்ளிடல்கள் இடம்பெற வேண்டியுள்லதால்,  sudo
அத்தியாவசியம். தபுண்டு வலைத்தள பக்கத்தில் இது சரியாகக்
கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய   INSTALL.txt   கோப்பை அடுத்த தபுண்டுவில்
சேர்ப்பதானால் அதில் இவ் வழுவை அகற்றுங்கள்.

2. இன்று காலை உபுண்டு-எட்ஜி நிகழ்வட்டு இயக்கதில்  (in a LiveCD
session) தபுண்டு நிறுவினேன் - அப்போது முனையத்தில் தெரிந்த தகவல்களை
இத்துடன் இனைத்த கோப்பில் பார்க்கலாம். அதில் 3 இடங்களில் பின்வரும்
அறிவிப்பை காண்க:

> * Reloading GNOME Display Manager configuration...                                                    * Changes will take effect when all current X sessions have ended.
> invoke-rc.d: initscript gdm, action "reload" failed.

இதனால்  வழுக்கள் ஒன்றும் இல்லை.  பயனர் கணக்கில் இருந்து
(ctrl+alt+backspace மூலம்) வெளியேறி  மீண்டும் பயனர் பதிவு (username:
ubuntu, and blank password)  செய்து பாவிக்கையில் பிரச்சினைகள்  ஏதும்
இல்லை.  ஆனால் அந்த " invoke-rc.d...." என்ற வாக்கியம் எதற்கு வருகிறது?
தங்களுக்குத் தெரியுமா?

3.  ஆவரங்கால் உள்ளிடலுக்கான ஐகான் scim உள்ளிடல்கள் அட்டவனையில்
காட்சியளிப்பதில்லை. பார்த்தீர்களா?  தபுண்டுவில் உள்ள  scim-m17n
பாலமானது  0.1.3-2 வெளியீடு. அதன்பின்னர் வந்த வெளியீடுகள் (0.2.0,
0.2.1) நான் பாவித்த போதும் ஆவரங்கால் முறையின் ஐகான் காட்சியில்லை.

மேலும் தபுண்டுவில் ஆவரங்காலுக்கான கோப்பின் பெயர்  ta-ava.mim. அதன்
முன் தாங்கள் குழுமத்திற்கு கொடுத்திருந்த  (டாப்பருக்காக என நினவு)
பொதியில்   ta-avarangal.mim  என்ற பெயர். இரண்டிலும்  உள்ளே   input
method   என்ற  வரையறுத்தலில்  ta avarangal என்று உள்ளது. ஏற்கனவே வேறு
கோப்புப் பெயர் மூலம் ஒரு உள்ளிடல் விசைபலகை முறையை பாவித்துள்ள ஒரு
பயனரின் கணக்கில் அதே முறையை மீண்டும் வேறொரு பெயருள்ள கோப்பை நிறுவி
மேம்படுத்த முனைகயில் சில குழப்பம் ஏற்படுகின்ற சூழல்களில் அம்முறை
செயலிப்பதற்கு பெற முடியாத வழு ஏற்படுகிறது. தவிர்ப்பது இலகுதான். இதைப்
பற்றியும் வேறு சில உதவக்கூடிய விடயங்களையும் இன்று இரவ / நாளை அடுத்த
மடலகளில்  எழுதுகிறேன்.

அன்புடன்

~சேது

On 1/15/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> தபுண்டு 6.10.2 இற்கான பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையை எட்டிவிட்டன.
> சோதனைப்பதிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது
> இம்முறை பயனர் எளிமை கருதி வரைகலை இடைமுகப்புடன்கூடிய நிறுவல்
> சேர்க்கப்பட்டுள்ளது.
>
>   http://www.viduthalai.org/home/doku.php?id=tabuntu
>
> சேர்க்கப்படவேண்டிய வசதிகள் குறித்து தங்கள் ஆலோசனைகளை கோருகிறேன்.
>
> தபுண்டுவின் முதல் பதிப்பை நிறுவிய பிறகு தமிழ் பயன்பாட்டுக்கென நீங்கள்
> உபுண்டுவில் வேறேதாவது பொதிகள் நிறுவ வேண்டி இருந்ததா? தபுண்டு செய்து
> தந்ததற்கு மேலதிகமாக தமிழுக்கென நீங்கள் வேறு ஏதாவது அமைப்புக்களை
> செய்துகொண்டீர்களா?
>
> கடந்த தபுண்டு ஏதாவது வழுக்களை கொண்டிருந்ததா/
>
> இதற்கு வரும் பதில்கள் தபுண்டுவின் எதிர்வரும் பதிப்பை சீரமைக்க உதவும்.
>
> உபுண்டுவை நிறுவிய பிறகு இணைய இணைப்பு இல்லாத நிலையில் தபுண்டுவை மட்டும்
> நிறுவிக்கொண்டால் சகலவிதமான தமிழ் வசதிகளையும் கணினி பெற்றுவிட வேண்டும். இதுவே
> தபுண்டுவின் இலக்கு.
>
> தமிழ் பயனர்கள் மட்டத்தில் க்னூ/லினக்ஸ் பயன்பாட்டை அதிகரிக்க, அதன்மீதான
> கவர்ச்சியை உருவாக்க இவ்வாறான எளிய வழிமுறை மிகவும் உதவக்கூடும்.
>
> நன்றி
>
 > மு.மயூரன்
>
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: Tabuntu-onLiveCD
Type: application/octet-stream
Size: 3760 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070116/a8686a7c/attachment.obj 


More information about the Ubuntu-l10n-tam mailing list