[உபுண்டு_தமிழ்]தபுண்டு இரண்டாம் பதிப்பிற்கான பணிகள்

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Mon Jan 15 07:37:41 GMT 2007


தபுண்டு 6.10.2 இற்கான பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையை எட்டிவிட்டன.
சோதனைப்பதிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது
இம்முறை பயனர் எளிமை கருதி வரைகலை இடைமுகப்புடன்கூடிய நிறுவல்
சேர்க்கப்பட்டுள்ளது.

http://www.viduthalai.org/home/doku.php?id=tabuntu

சேர்க்கப்படவேண்டிய வசதிகள் குறித்து தங்கள் ஆலோசனைகளை கோருகிறேன்.

தபுண்டுவின் முதல் பதிப்பை நிறுவிய பிறகு தமிழ் பயன்பாட்டுக்கென நீங்கள்
உபுண்டுவில் வேறேதாவது பொதிகள் நிறுவ வேண்டி இருந்ததா? தபுண்டு செய்து
தந்ததற்கு மேலதிகமாக தமிழுக்கென நீங்கள் வேறு ஏதாவது அமைப்புக்களை
செய்துகொண்டீர்களா?

கடந்த தபுண்டு ஏதாவது வழுக்களை கொண்டிருந்ததா/

இதற்கு வரும் பதில்கள் தபுண்டுவின் எதிர்வரும் பதிப்பை சீரமைக்க உதவும்.

உபுண்டுவை நிறுவிய பிறகு இணைய இணைப்பு இல்லாத நிலையில் தபுண்டுவை மட்டும்
நிறுவிக்கொண்டால் சகலவிதமான தமிழ் வசதிகளையும் கணினி பெற்றுவிட வேண்டும். இதுவே
தபுண்டுவின் இலக்கு.

தமிழ் பயனர்கள் மட்டத்தில் க்னூ/லினக்ஸ் பயன்பாட்டை அதிகரிக்க, அதன்மீதான
கவர்ச்சியை உருவாக்க இவ்வாறான எளிய வழிமுறை மிகவும் உதவக்கூடும்.

நன்றி

மு.மயூரன்-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070115/95f3a549/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list