[உபுண்டு_தமிழ்]உபுண்டு இயங்கு தளக் கையேடு...

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Sun Jan 14 12:29:15 GMT 2007


வணக்கம்,

உபுண்டு இயங்கு தளக் கையேட்டினை  (முதற் பகுதியை) முயன்று இன்று சற்று
சீர்செய்துள்ளேன்..

உபுண்டு தமிழ் குழும விகியில்,

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/உபுண்டு_இயங்கு_தளக்_கையேடு

மேற்குறிப்பிடப் பட்ட மீயிணைப்புகள் (hyperlink) நேரடியாகச் சொடுக்கும்
(Click) போது பலனளிக்காது போகிற பட்சத்தில் அவற்றை  பிரதி எடுத்து
உலாவியின் முகவரிப் பெட்டியில் ஒட்டி பயன்படுத்தவும்.

இவை  அவ்வப்போது புதுபிக்கப் பட்டு வருகின்றன.. இம்மாதத்திற்குள்
முழுமையும் நிறைவடையும்.

படித்து தகுந்த இடங்களில் பரிந்துரைகள்/ மாற்றம் செய்ய வேண்டி இருப்பின்
தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பி.கு: மேலும் துவக்கத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் என்றாலும்,
அனைவரும் எவ்வளவு விரைவில் இயலுமோ  அவ்வளவு விரைவில் முயன்று தமிழிலேயே
தங்களின் கருத்துக்களை  தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தாங்கள் இன்னமும் விண்டோஸ் பயன்படுத்துபவராய் இருந்து :-( பயஃர்பாக்ஸ்
பயன்படுத்தினால், Tamil Key செருகினை (Plugin) நிறுவி (Install)  தமிழ்
தட்டச்சு வசதிகளை  எளிதில் பெற முடியும்.

--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா


More information about the Ubuntu-l10n-tam mailing list