[உபுண்டு_தமிழ்]தமிழில் தொழில்நுட்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளுதல்..

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Wed Jan 10 18:27:47 GMT 2007


வணக்கம்,

பல தமிழர்களின் திறமை  வெளிவராமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் தங்கள்
கருத்துக்களை  தங்களின் மொழியில் எடுத்துரைக்கும் ஏற்பாடு இல்லாது இருப்பதே...

தொழில்நுட்பத் திறமையை  ஒரு குறிப்பிட்ட மொழிதெரிந்திருந்தால் மட்டுமே பொதுவாக
வெளிப்படுத்த முடியும் என்கிற நிலைமை  மாற வேண்டும்...

இதனை  களையும் வண்ணம் வரும் (அ) அடுத்த ஞாயிறு துவங்கி ஒவ்வொரு வாரமும் GNU/
லினக்ஸ் சார்ந்த்த விஷயங்களை  தமிழில்  எடுத்தியம்பும் வகுப்புகளை  நடத்த
உபுண்டு தமிழ் குழுமம் திட்டமிட்டுல்ளது.

இது உபுண்டு GNU/ லினஸ்கென்று வரையறுக்கப் படாது, கட்டற்ற மென்பொருட்கள்
குறித்த பொதுவான விவாதத் தளமாக அமையும். நிரலாக்க மொழிகள், ஒருங்குறி, உபுண்டு
தமிழாக்கம், டெயியன், ரெதாட் நெட்வொர்க்கிங் என அனைத்தையும் உள்ளடக்கி இது
இருக்கலாம்..

யார் வேன்டுமானாலும் தங்களுக்கு பிடித்த தொழில்நுட்பத் தலைப்பில் பாடங்களை
எடுக்கலாம்....

முதலில் சிறிய அளவில் எமது இல்லத்தில்  21 ஜனவரி 2006 துவங்கவுள்ளோம். பின்னர்
இதற்கு கிடைக்கும் வரவேற்பை  பொறுுத்து தி நகரில் உள்ள வேறு இடங்களுக்கு மாற்றி
அமைக்கலாம் எனத் திட்டம்.

இது குறித்து தங்களின் கருத்துக்களை அறிய விழைகிறேன்..

நன்றி...
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070110/d5fb86bc/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list