[உபுண்டு_தமிழ்]வங்கி கணக்கு உருவாக்குவது குறித்து?

amachu shriramadhas at gmail.com
Tue Jan 9 04:04:29 GMT 2007


On Mon, 2007-01-08 at 15:35 +0530, Uma Maheswaran J wrote:
> தயவுசெய்து தங்களுக்கு பணம் அனுப்புவது பற்றி எனக்குத் தெரியப்
> படுத்துங்கள்.

தங்களைப் போலவே அனைவருக்கும் அனுப்பப் படும் முறையினை ஏற்படுத்துவது சாலச்
சிறந்தது...

இது வரை இங்ஙனம் கோரியவர்கள் மிகச் சிலரே என்பதால் செலவுகளை நானே
ஏற்று வந்தேன்... எதிர்காலத்தில் பலர் கோரலாம்.. அச்சமயம் இது குறித்து
மாற்று ஏற்பாடுகள் செய்தல் அவசியம்...

இது குறித்து வங்கி கணக்கொன்றை ஏற்படுத்தலாமா எனக் கூட யோசிக்கின்றேன்..
ஆனால் சிலர் முன்வந்து இதனை பார்த்துக் கொள்ள வேண்டும்...

அனைவரின் கருத்துக்களையும் இவ்விஷயத்தில் எதிர்பார்க்கிறேன்...

நன்றி...

On Mon, 2007-01-08 at 15:35 +0530, Uma Maheswaran J wrote:
> 
> 
> 
> Uma Maheswaran J
> <umamaheswaran.j at gmail.com>
>                To: 
> ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com>
>              Subject: 
> Re: Paramakudi House address - A
> small change in the previous mail
>               Date: 
> Mon, 8 Jan 2007 15:35:03 +0530
> 
> 
> 
> அன்புள்ள திரு ராமதாஸ்,
> 
> உபுண்டு குறுவட்டுக்களை அனுப்பி வைத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த
> நன்றிகள்.
> 
> தயவுசெய்து தங்களுக்கு பணம் அனுப்புவது பற்றி எனக்குத் தெரியப்
> படுத்துங்கள்.
> 
> குறுவட்டுக்கள் எனக்குக் கிடைத்தபிறகு யாரேனும் பெங்களூரிலிருந்து
> கேட்டால் எனக்குத் தெரியப் படுத்துங்கள். இனி அதன் பிரதிகளை எடுத்து
> அனுப்பத் தயார் (அவ்வாறு அனுமதி இருந்தால் மட்டும்).
> 
> குறுவட்டுக்கள் எங்கள் முகவரிக்குக் கிடைத்தபிறகு தங்களுக்குத் தெரியப்
> படுத்துகிறேன்.
> 
> உபுண்டு குறுவட்டு 6.10 பதிப்பு என எண்ணுகிறேன். ஏனெனில் 6.06 என்னிடம்
> உள்ளது.
> 
> அன்புடன்,
> உமா மகேஸ்வரன்
> 
> 
> 


More information about the Ubuntu-l10n-tam mailing list