[உபுண்டு_தமிழ்]குநோம் முனைய பிரச்சனை

Sethu skhome at gmail.com
Tue Feb 27 05:04:54 GMT 2007


On 2/27/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> கேடீடீயின் கன்சோல் செயலியில் எழுத்துக்கள் தெரிவதில் பிரச்சனை இல்லை. ஆனால்
> சொற்கள் துண்டிக்கப் பட்டு காட்சி கொடுக்கின்றன.
>
> உள்ளிடுவதில் பிரச்சனை  இருக்கத்தான் செய்கிறது!
>
>
> பார்க்க:
> http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/குநோம்_முனைய_பிரச்சனை
>

குநோம் முனையத்தில் ஒருங்குறி monospace க்கான தமிழ் எழுத்துருவின்
ஒருமித்த அகலமின்மையால் (non fixed width) ஏற்படும் பிரச்சினைக்கு
மேலதிகமாக அடிப்படை பிரச்சினையும் உள்ளது. அது சிக்கல் எழுதுருக்கள்
சேராமால் காட்சி தருவது. குனோம் முனையத்தில் பின்வரும் வரியை உள்ளிட்டுப்
பாருங்கள்

க் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ (press enter here to break the line)

முன்னுயிர் உருக்கள் (ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு ஆகிய glyphs)
சேராமல் இடம் மாறியும், மேலும் இகர, ஏகர, உகர, உகார என்பனவற்றிற்கான
பின்னுயிர் உருக்கள் (glyphs) சரியாக உருப்பெறாமலும் காணும், rendering
இல்லாதது போல. உள்ளிடும் வரியில் ஒரு எழுத்தை உள்ளிட முனைகையில் ஏற்கனவே
உள்ளிட்ட எழுத்துக்கள் மறைவது போல இருக்கும். ஆனால் அவ்வரி முடிந்து
அடுத்த வரி செல்கையில் முதல் வரியில் எல்லாம் தென்படும் மேற்கூறிய
பிரச்சினைகளுடன்.

KDE Konsole லில் rendering உண்டு ஆனால் தாங்கள் குறிப்பிட்டவாறு
துண்டிக்கப்பட்டு காணும் என்பதைக் கண்டிருக்கிறேன்.

BDF (bit mapped fonts) வரையருக்கப்பட்ட அகலத்தினால் (fixed width)
ஆனவைகள் தானே? தமிழினிக்சின் யாகூ குழும இணையத்தளத்தில் கோப்புகளில்
unicode கோப்பகத்தினுள் பாருங்கள் திரு. வசீயின் consoleTamilUni.bdf
எழுத்துரு உள்ளது - முன்னர் சில மாதங்கள் முன் அதைப் பதிவிறக்கி
இணையத்தில் சில howto க்களைப் பார்த்து அதை உள்ளிட வேண்டிய இடத்தில்
சேர்த்துப் பார்த்திருக்கிறேன் - மேலும் bdftopcf கட்டளை மூலம்   pcf ஆக
மாற்றியும் முயற்சி செய்திருக்கிறேன் அப்போது. எல்லாவற்றிலும்
பிரச்சினைகள் இருந்தது. அப்போது பாவித்த முறைகளையும் கணடறிந்த
பிரச்சினைகளயும் குறித்து வைத்திருக்கவில்லை - இப்போது நினைவுக்கும் அவை
வரவில்லை. மீண்டும் முயற்சித்துப் பிரச்சினைகளை பின்னர் எழுதுவேன்.

rendering support தேவைப்படா TANE (a.k.a TUNE, புதகு) குறியீட்டுடனான
ttf எழுதுருக்களுக்கு பிரச்சினை குறைவு ஆயினும் அகலத்தினால் ஆன
பிரச்சினைகள் உள்ளன.

நமது ஒருங்குறி (utf-8) க்கு mlterm (multi lingual terminal) ஒரு மாற்று
முறையாகுமோ என முன்னர் சிறிது ஆராயந்தேன். ஆனால் இண்டிக் utf-8
சிக்கலுருக்களில் இந்தி மொழி எழுத்துருக்களுக்கு மட்டும் மேலும் ISCII
குறியீட்டுக்களுக்கும் support உள்ளதாகக் கண்டிருந்தேன். mlterm இல்
உள்ளிட m17n விசையமைப்பை நேரடியாக (scim, uim, iiimf மூலம் அல்லாது)
பாவிக்க வேண்டும் எனவும் அறிந்தேன். அது எவ்வாறு செயலிக்கிறது என்பதைக்
கண்டறியவில்லை.

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list