[உபுண்டு_தமிழ்]வணக்கம்...

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Wed Feb 14 02:08:54 GMT 2007


வணக்கம்,

நேற்று நடைபெற்ற உபுண்டு சமூக நிர்வாகக்குழு கூட்டத்தில் உபுண்டுவின் முறையான
அங்கதினராக அங்கீகரிக்கப் பட்டோம். இது வரை உபுண்டுவிற்கு நாமளித்த பங்குகளை
வைத்து இந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது.

அது சமயம் உரையாடலில் பங்கு கொண்டு எமது பங்களிப்பினைப் பற்றி பகன்றமைக்கு
ஷங்கர் கணேஷுக்கும், இது வரை இந்த உபுண்டு தமிழ் குழுமத்தினை நடத்திச் செல்ல
உறுதுணையாக இருந்து வருகின்ற சமர்ப்பணம் ஐடி குழுமம், வாசுதேவன் அவர்கள்,
கணேஷ், விக்ரம் சாய் பாலாஜி, மயூரன், சேதுண்ணா, முகுந்த், ரவி, செந்தில்ராஜா,
ஹரிஷ், உமாமகேஸ்வரி உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது இந்த தமிழ் குழுமம் மென்மேலும் வளர்ந்து தமிழ் கணிநுட்பத்தில் நல்லதொரு
பங்கினை அளித்திட தங்களின் ஊக்கத்தினையும், பிரார்த்தனைகளையும்,
பங்களிப்பினையும் தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070214/4cc15a86/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list