[உபுண்டு_தமிழ்]கான்கொயரரும் பயர்பாக்சும் - முகவரி தெரிவதிலுள்ள வித்தியாசம்...
K. Sethu
skhome at gmail.com
Thu Feb 1 20:30:10 GMT 2007
On 01/15/2007 09:37 AM, ம. ஸ்ரீ ராமதாஸ் wrote:
> நேற்று கான்கொயரர் பயன்படுத்தும் போது உலாவியின் முகவரி பெட்டியில் தமிழ்
> எழுத்துக்களைக் காட்டுவதிலுள்ள வித்தியாசம் கண்டெடுத்தேன்..
>
> பார்க்க,
>
> http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/கான்கொயரரும்_பயர்பாக்சும்
>
> தங்களின் கருத்துக்களை அறிய விழைகிறேன்...
>
>
>
ராமதாஸ் மற்றும் எல்லா நண்பர்களே,
இதைப் பற்றி https://wiki.ubuntu.com/LoCoTeams/Feedback/LanguagesJanOhSeven
இலும் ராமதாஸ் தெரிவித்துள்ளதை இன்று பார்த்தேன். கான்கொரரில் url களில் உள்ள utf-8
complex text எழுத்துருக்கள் உத்தேசிக்கப்பட்ட மொழியிலேயே உருப் பெறுகிறது .
தாங்கள் கூறிய பயர்பாக்சில் தெரியும் வித்தியாசமான காட்சியானது, எட்ஜியில்
எபிஃபனி (epiphany) உலாவியிலும் அவ்வண்ணமே.
சூசெ 10.2 இல் பார்த்தேன் - அங்கும் அப்படியே கான்கொரரில் சரியாகத் தெரிகிறது. ஆனால்
பயர்பாக்சிலும் எபிபனியிலும் மாறு வேடக் காட்சி.
மேலும் MS விண்டோவில் பயர்பாக்சில் லினக்சில் போலத்தான். Internet Explorer -6 (IE)
இல் வித்தியாசம். அதில் url பெட்டகத்தில் உள்ளிடப்பட்ட தமிழ் எழுத்துருக்களை அந்த url யை
சென்றடைந்தவுடன் கேள்விக்குறிகளால் நிரப்பிக் காட்டுகிறது. ???? போன்று. (விண்டோ
பாவிப்பவர்கள் செய்து பாருங்கள்)
ஆக பயர்பாக்சில் url பெட்டகத்தில் உள்ளிடப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் கான்கொரரில்
போலல்லாது ஏதோ ஒரு மாறுவேடத்தில் தெரிவது உபுண்டு லினக்சில் மட்டுமேயான வழு அல்ல!
ஆனால் வேறு ஏதோவொரு பரவலான காரணத்தினால்த்தான் இருக்கும்.
மேலும் விண்டோவில் ஒபேரா உலாவியில் பார்க்கையில் லினக்ஸ் கான்கொரரில் போல url இல் தமிழ்
எழுத்துருக்கள் மாற்றமில்லாமல் சரியாகத் தெரிகிறது. எட்ஜியிலும், சூசெ 10.2 இலும்
ஒபேரா நிறுவிப் பார்த்தேன். பயர்பாக்சில் pango support இல்லாவிடில் எப்படியோ
அப்படியே லினக்ஸ் ஒபேராவில் உலாவியின் எல்லாப் பாகங்களிலும் பல உயிர் மெய்கள் சேரா
நிலையில் காணப்படுகின்றன. url பெட்டகத்திலும் அப்படியே. ஆக லினசில் ஒபேராவைப்
பொருத்த வரை சிக்கல் எழுத்துருக்களுக்கு pango அல்லது வேறு பொருத்தமான rendering
support எப்படி கொடுப்பது என்பதுதான் கேள்வியாக இருக்கும். ஒபேரா கட்டற்ற மென்பொருள்
அல்லாதலால் அதைப்பற்றி மேலும் அலச நான் விரும்பவில்லை.
ஆனால் பயர்பாக்ஸ், எபிஃபனி, IE போலல்லாது, கான்கொரரிலும் ஒபேராவிலும் url
பெட்டகத்தில் சிக்கல் எழுத்துருக்கள் மாறு விதமாகவோ அல்லது விணடோவில் போல
வினாக்குறியீடுகளாகவோ காட்சி தராமல் சரியாக உள்ளிட்டவாறே நிலையாக காட்சி
கொடுப்பதற்கு காரணங்கள் எவை? ஒபேராவின் பதிவிறக்கத்ததளத்திலிருந்து உபுண்டு எட்ஜிக்காக
பதிவிறக்கிய பொதியின் பெயர் : opera_9.10-20061214.6-shared-qt_en_i386.deb .
இதில் இடையே qt என்பது உள்ளதைப் பாருங்கள். கான்கொரர் உலாவி qt அடிப்படையில்
ஆக்கப்பட்டது என்பது நிச்சயம். பயர்பாக்ஸ், எபிஃபனி என்பன gtk அடிப்படை என நினைக்கிறேன்.
இது தான் (qt vs gtk), வித்தியாசங்களுக்கு காரணமோ?
அது எப்படியேயாயினும் இன்னொன்றையும் அவதானியுங்கள். ராமதாஸ் எடுத்துக்காட்டாகப் பாவித்த
தளம் :
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/தமிழ்_வசதிகள்_பெற்றுக்கொள்ள
இதன் கடைசியில் வரும் தமிழ் எழுத்துருக்கள் பயர்பாக்ஸ் மற்றும் எபிஃபனி உலாவிகளில்
மாற்றித்தோற்றமளிப்பது இவ்வாறு தொடங்கி: %E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%
.............................
(மேற்கூறியதில் முழு நீளத்தையும் காட்டவில்லை - முதல் கட்ட நீளத்தை மட்டும் காட்டியுள்ளேன்)
இனி Ishida's Unicode Code Converter என்ற இணையத்தள செயலியைப் பாருங்கள் , இதில்:
http://people.w3.org/rishida/scripts/uniview/conversion.php
அத்தளத்தில் Characters என்ற உள்ளிடல் சாரளதினுள் மேற்கூறிய url இன் தமிழ்
எழுத்துருக்களை (அதாவது "தமிழ்_வசதிகள்_பெற்றுக்கொள்ள" என்பதை) நகல் செய்து
ஒட்டுங்கள். அல்லது விசைப்பலகை மூலம் உள்ளிடுங்கள் . பின் "Percent escapes" என்ற சிறு
சாரளதின்னுள் சொடுக்குங்கள் - உடனே இப்படித் தெரியும் :
http://i18.tinypic.com/40o1kxt.png
அதாவது பயர்பாசிலும் எபிஃபனியிலும் url இல் வித்தியாசமாகத் தெரியும் எழுத்துருக்கள்
அவ்வெழுத்துக்களுக்கான "Percent escapes sequences ஆகும். (இதைப்பற்றி மேலும்
தெரிந்தவர்கள் எடுத்துச்சொல்லுங்களேன்)
நான் விசைப்பலகை அமைப்புக்கள் (முக்கியமாக தட்டச்சு முறைகள்) ஒருங்குறி முறையில்
சரியாக ஆக்கப்பட்டுள்ளனவா என்பதை அலசுகையில் மேற்கூறிய Ishida Converter கருவி
மிகவும் உதவியாக உள்ளது. அதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்.
கடைசியாக இன்னொரு தகவல் நினைவுறுத்த வேண்டும். உபுண்டு பிரீசி, டாப்பர், எட்ஜி
என்பவற்றில் எபிஃபனி உலாவி பாவித்தால் அந்த உலாவியில் தமிழ் உட்பட எல்லா சிக்கல்
எழுத்துருக்களுக்கும் pango support கொடுப்பதற்கு export MOZ_ENABLE_PANGO=1 என்ற
பழைய கட்டளை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். (பயர்பாக்சுக்கு பிரீசியில் அவ்வாறு செய்ய
வேண்டியிருந்தது. ஆனால் டாப்பரிலும், எட்ஜியிலும் தமிழுக்கான support நிறுவுகையில்
பயர்பாக்சுக்கான pango support தன்னியக்கதில் ஏற்படுத்த பட்டுவிடும். தமிழுக்கான
support நிறுவாவிடில் மேலும் வேறு எந்தவொரு indic மொழிக்கும் support
நிறுவாவிடின் பயர்பாக்சுக்கான pango support ஏற்படுத்த கொடுக்க வேண்டிய கட்டளை:
MOZ_DISABLE_PANGO=0 )
~ சேது
More information about the Ubuntu-l10n-tam
mailing list