[உபுண்டு_தமிழ்]மின்னெழுத்து?

K. Sethu skhome at gmail.com
Thu Dec 13 11:33:46 GMT 2007


On Dec 13, 2007 2:25 PM, amachu <amachu at ubuntu.com> wrote:

> On Thursday 13 December 2007 13:52:40 K. Sethu wrote:
> > மின்னெழுத்து - ??
>
> font
>
>
ஆ - பலரும் சொலவது போல எழுத்துரு என்றே கூறலாமே?

//தமிழில் எண் எழுத்து என சகலத்தையும் உள்ளடக்கிய மின்னெழுத்து இருக்கிறதா?//

ஒருங்குறிக்காயின் SooriyanDotCom இல் தமிழிற்கான  எல்லா  எழுத்துக்கள் /
எண்கள் உள்ளன - அது  2004 இல்  unicode 4.1  வெளி வந்தபின்  ஆக்கப்பட்டதால்
அப்போது ஒருங்குறியில் சேர்க்கப்பட்ட புதிய sha மற்றும் தமிழ் சைபர் அதில்
உள்ளன. கோபி அளித்த TABu, TAMu எழில்மிகு எழுத்துருக்களிலும் புதிய sha
பார்த்தாக நினைவுள்ளது.   (தமிழ் சைபர் உள்ளதோ என்பதைப் பார்த்திலேன்).  விண்டோ
விசிட்டாவுக்கான லதா எழுத்துருவிலும் MS Office - 2007 வுடன் வரும் Arial MS
Unicode (a.k.a universal font) இலும் அவை உள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
முன்னர் வெளிவந்த எழுத்துருக்களில் இவையிரண்டும் இருக்காது. TSCu_Paranar போன்ற
பல வருடங்கள் முன்வந்தவைகளுள் வேறு சில குறியீடுகளும் இல்லை.

லினக்சில் ஓர் எழுத்துருவில் ஒரு character இல்லாவிடிலும் அக் character வேறு
ஏதாவது ஓர் எழுத்துருவில் இருப்பின் உள்ளடக்காத எழுத்துருவும் அதைக் காட்டும்.//இத்தைகைய உள்ளீட்டு முறையுண்டா?//

கேள்வி சற்று தெளிவில்லை. பயன்படுத்தக்கூடிய தமிழிற்கான விசைப்பலகைகளில் ஒரு
குறிப்பிட்ட chracter க்கு விசை இல்லாவிடில் அதை gucharmap போன்ற ஒரு character
map மூலம் நகல் எடுத்து பாவிக்கலாம். GEDIT இலும் chractermap plug-in
செய்யமுடியும், தெரியுமா?

அத்துடன் விசைப்பலகை வழி உள்ளிட scim  இல் Other என்பதனுள் அடங்கிய Raw Code
எனபதை பயன்படுத்தலாம். எந்தவோர் ஒருங்குறிக்கான HexaDecinal code யை அதன் வழி
உள்ளிடுகையில் அதற்கான chracter காட்சி தரும், அவ்வெழுத்து ஏதாவது ஓர்
எழுத்துருவிலாவது  இருந்தால்.

~சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071213/51ed0aaf/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list