[உபுண்டு_தமிழ்]சிலத் தெளிவுகள்?

Sethu skhome at gmail.com
Wed Aug 22 03:24:54 BST 2007


On 8/21/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>
> xkb இல் தமிழ் 99 வடிவம் சாத்தியமில்லை. (நானறிந்தவரை)
> இப்போதைக்கு மீட்சி இல்லை என்றுதான் தெரிகிறது.xkb இல் தமிழ்  99 அமைக்க முடியாது. தமிழ் 99 மற்றும் அஞசல், ஆவரங்கால் போன்ற
எல்லா உரோமனியமாக்கப்பட்ட ஒலிப்பியல் விசைப் பலகைகள் என்பவைகளில் ஒரு உயிர்
எழுத்துக்கும் அதனாலான உயிரொலிக்கும் ஒரே விசையாக இருக்க வேண்டும். அகர
மெய்யின் பின் வரின் அம் மெய்யுடன் சேரும் உயிரொலி ஆகவும், அகர மெய் அல்லாத
ஏனைய ஒன்றின் பின் வரின் உயிர் ஆகவும் உருவாகுவதே அம் முறைமைகளின் அடிப்படை
தேவை.

xkb நிரலில் ஒரு விசைக்கு ஒரு எழுத்து என்றே விசை மாற்றம் (mapping) ஏற்படுத்த
முடியும். ஆனால் ஒவ்வொரு விசைக்கும் அதன் shift, alt, shift+alt என மேலதிகமான 3
மட்டங்களையும் xkb இல் தனித் தனி விசை போல பாவிக்கலாம்.  அதானாலேயே
இன்ஸ்கிரிப்ட் முறைமை xkb இல் சாத்தியமாகிறது (அதில் உயிர் எழுத்துக்கு shift
பாவிப்பதால்)

மேலும் xkb நிரலில் ஒன்றுக்கு மேற்பட்ட விசைகள் தொடர் ஒன்றினால் அத்தொடரை
உள்ளிடுகையில் அத்தொடரின் ஒவ்வொரு விசையும் தனியாக இடும் போது உருவாகும்
எழுத்துக்கள் மற்றும் உயிரொலிகள் ஆகியவறை சேர்த்து விசைகள் மாற்றம் செய்யும்
கட்டளைகளை ஏற்படுத்த முடியாது.  ஏனெனில்  ஊள்ளிடுகைகளை காப்பகப் படுத்தி மீள்
கொணர்ந்து  மாற்றுதல் என்பன முடியாது. எனவே தமிழ்  99 இல் இரு அகர மெய்கள்
அடுத்தடுத்து வரின் அவற்றுள் முதல் அகரமெய் மெய்யாகாவே மாற்றுதல் என்பதற்கான
தமிழ் 99 நியம் விதிகள் அதே போல வல்லின மெல்லின இனைப்புகளுக்கான விதிகள்
போன்றவைகளை செயல் படுத்த முடியாது. (இக் காரணத்துக்காகவே ஒருங்குறிக்கான பரைய
மற்றும் புதிய தட்டச்சு அமைபுக்களையும் மாற்றங்கள் இல்லாமல் xkb அமைப்பாக ஆகா
முடியாது)


தற்பொது ஸ்கிம் காரர்கள் X இல் இயங்கக்கூடிய ஸ்கிம் சட்டகவமைப்பை உருவாக்க
> முயற்சிப்பதாக கேள்விப்பட்டேன். எவ்வளவு தூரம் உண்மை/சாத்தியம் என்று
> தெரியவில்லை.
>
> இது சாத்தியப்படுமானால், பெருமகிழ்ச்சியுறலாம்.


எனக்கு தெரிந்தவரையில் scim மற்றும் iiitmf ஆகியோர் இனைந்து IM-BUS என்று ஒன்றை
உருவாக்குகிறார்கள் (இன்னமும் வெளி வர வில்லை) அதையா சொல்கிறீர்கள் ?

[..]

கா. சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070822/577bddf9/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list