[உபுண்டு_தமிழ்]இன்றைய வாராந்திர ஐ.ஆர்.சி சந்திப்பின் சாராம்சம்

K. Sethu skhome at gmail.com
Sun Apr 22 18:19:37 BST 2007


On 04/22/2007 09:54 PM, ஆமாச்சு wrote:
> இன்றைய உபுண்டு தமிழ் குழும வாராந்திர ஐ.ஆர்.சி சந்திப்பின் சாராம்சம்...
>
>     * இன்று  நடைபெற்ற  ஐ.ஆர்.சி உரையாடலில் பஃங்கி பைஃஸ்டி போட்டி குறித்து 
>       அலசப் பட்டது. பைஃஸ்டி சென்னையிலிருந்து  மே முதல் அல்லது  இரண்டாவது  வாரம்
>       வெளியிடப்  படும். இது  விஷயமாக  உபுண்டு  இந்திய  குழுவுடன் 
>       கலந்தலோசிக்கப்  பட்டது. பார்க்க:
>       https://wiki.ubuntu.com/TheFunkyFeistyCompetition
>
ஆமாச்சு , f ஒலிக்கு நாம் தற்காலங்களில் சுட்டியாக "ஃ" ஐ பாவிக்கும் சரியான முறையை 
மீண்டும் தெளிவு படுத்த வேண்டியுள்ளது.

பஃங்கி என எழுதினால் அது "அஃது," எஃகு: என்பவைகளில் போல பhங்கி.  அதைத்தான் 
அகேனமாக்கல்  (glotalising) பணி என்பர். அதே போல பைஃஸ்டி என்பது feihisty  என்பது  
போல .  எனவே ஏற்றுக்கொள்ளக்கூடிய தமிழாக்கங்கள் (transliterations) பின்வருமாறு:

Funky = "ஃபங்கி" அலலது  ""பங்கி"
Feisty  = "ஃபைஸ்டி" அல்லது "பைஸ்டி"

~சேது




More information about the Ubuntu-l10n-tam mailing list