[உபுண்டு_தமிழ்][அறிவிப்பு] குபுண்டுவை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இயங்குதளம்

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Tue Apr 17 05:29:49 BST 2007


//I was also disappointed by Mauran's mail//

//Attacks like this is not going to help.//


சரவணன்,

என்னுடைய பதில் மடல் உங்களுக்கு சில வேளை சங்கடங்களை ஏற்படுத்தியிருந்தால்
மன்னிக்கவும்.

ஆக்கபூர்வமான உரையாடல்கள் பயனற்றுப்போன பிடிவாதமான சூழலை இதே மடலாடற் குழுவில்
கடந்தே வந்திருக்கிறேன்.

அந்தப்பின்னணியைக்கொண்டே என் இந்த மடலின் "தாக்குதல்" தொனியைப் புரிந்துகொள்ள
வேண்டுகிறேன்.

இந்துசமயம் சார்ந்த இன்னொரு பெயர் வந்தாலேயொழிய இங்கே முத்தி என்ற பெயர் மாறும்
என்று நான் நம்பவில்லை.

மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சியே.ஊரில் இருப்பதால் இணையத்தொடர்பு, தமிழ் தட்டச்சு எல்லாம்
பிரச்சினையயிருக்கிறது.

எனக்கு இந்த விவாதத்தை தொடர விருப்பமில்லை.

நல்ல பணிகள் நடக்கட்டும். அதனைக் குழப்பவும் விருப்பமில்லை.

பொதுவான செயற்பாடொன்று பொதுவான பெயரைக்கொண்டிருக்கவேண்டும்.

தமிழர்க்குப்பொதுவான ஒன்றை எய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு "முத்தி" என்று
பெயர் வைக்கும் அபத்தத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா?
அந்த மனனிலையைத்தான் நான் எதிர்க்கிறேன்.

எனது பார்வையை ஏற்றுக்கொண்டால், பரிந்துரைகள் மூலம் பொதுப்பெயர் ஒன்றினை வைக்க
முயன்று பாருங்கள்.

என்னுடைய பரிந்துரைகள்,

அவிழ்
கடல்
காற்று.


-மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070417/af829904/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list