[உபுண்டு_தமிழ்]சோதனைக்குத் தயாராதல்

Sethu skhome at gmail.com
Thu Apr 5 09:54:30 BST 2007


On 3/25/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
> On Sat, 2007-03-24 at 20:23 +0530, மு.மயூரன் | M.Mauran wrote:
> > இன்று உபுண்டுவின் புதிய சோதனைப்பதிப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.
> >
[..]

> மேற்கண்ட இணைப்பு உபுண்டு பீஸ்டி யின் பீடா வெள்யீட்டுக்கான பக்கமாகும்.
> பதிவிறக்கி நிறுவி சோதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
>
> நன்றி.
>
> அன்புடன்,
>
> ம ஸ்ரீ  ராமதாஸ்


Feisty என்பதில் "ei" கூட்டெழுத்துக்களின் உச்சரிப்புக்கான மாற்றொலிகள்
(எனக்குத் தெரிந்த வரையில்) "ஐ (அய்)" , "எய்" என்பன. உதாரணங்கள்:
Height, Heist என்பவைகளில் "ஐ" யாக (File, Fine என்பவைகள் போல). Freight,
Weight, Geisha என்பவைகளில் கிட்டத்ட்ட "எய்" யாக.

i ஆனது e யின் முன் வருகையில், அதாவது "ie" என வரும் வார்த்தைகளிற்தான்
உச்சரிப்பு அநேகமாக இகரமாக அல்லது ஈகாரமாக இருக்கும். உ-ம்:
live(verb-லிவ்), sieve ( சீவ்)

Feisty இல் "ei" ஐகாரமாகவே ஒலிக்கவேண்டும் எனத் தெரிகிறது -
கேட்டுப்பாருங்கள் இத்தளங்களில்:

http://www.thefreedictionary.com/feisty
http://www.m-w.com/dictionary/feisty

எனவே ஃபைஸ்டி அல்லது ஃபயிஸ்டி என்பதில் ஒன்றை நாம் பாவிப்போமா?

feisty (ubuntu) -beta (i386) சோதித்தேன். தமிழ்ப் பாவனையைப் பொருத்த வரை
மாற்றங்கள் இல்லை எனத்தெரிகிறது. மேலும் சில தினங்களுக்குள் எழுத்துவேன்

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list