Re: சில விவரமறிய ஆசை!

மு.மயூரன் mmauran at gmail.com
Fri Sep 29 06:23:07 BST 2006


இந்துக்கள் மத வழக்கப்படியும், சிங்களவர்கள் தமது கலாசாரப்படியும் சித்திரையை
புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். சிங்களவர்களுக்கு இது மிக மிக முக்கியமான
கலாசார நிகழ்வு. வீதியில் பஸ் கூட ஓடாது. எல்லோரும் ஊர்களுக்கு
போய்விடுவார்கள்.

தமிழர்களுக்கு அப்படி இல்லை. சில இந்து தமிழர்கள், இந்து சமய நிகழ்வுகளில்
ஒன்றாக புத்தாண்டை கொண்டாடுவர்.

ஆனால் எல்லோரும் மிக மிக விமரிசையாக கொண்டாடும் புத்தாண்டு
ஆங்கிலப்புத்தாண்டுதான் (ஜனவரி 1).

எழுத்துச்சீர்திருத்தம் இலங்கையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நான் 2ம் ஆண்டு படிக்கும்போது அது நடைமுறைக்கு வந்ததாய் நினைவு.  அப்போதே
கொம்பிட்டு எழுதுவதை எல்லாம் ஆசிரியர்கள் திருத்தி எம்மை சீர்திருத்த
எழுத்துக்களையே எழுதவைத்தனர்.

இப்போது யாரும் பழைய முறைப்படி எழுதுவதில்லை.

தமிழீழத்தில், விடுதலைப்புல்களின் நிர்வாகப்பகுதிகளிலும் சீர்திருத்த
எழுத்துக்களே அவர்களது பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருக்கிறது.

தென்னிந்திய வழக்கத்திலிருந்து நாம் தமிழை பேசும் முறைதான் மாறுபடுகிறதே ஒழிய,
எழுதும் முறையில் பெரிதாக வித்தியாசமில்லை.

-மயூரன்


On 9/29/06, ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> மயூரன்/ சேது,
>
> இலங்கையில் நமது புத்தாண்டாய் சித்திரைத் திங்களைத் தானே  கொண்டாடுவீர்கள்?
> அங்கே
> பாரம்பரியமாய் நிலவும் வழக்கம் என்ன?
>
> மேலும் லை, ளை, னை, ணை போன்ற சொற்களுக்கு அழகாக கொம்பிட்டு எழுதும் வழக்கம்
> இலங்கையில்
> கடைபிடிக்கப் படுகிறதா?
>
> விவரமறிய ஆசை...
>
> வாழ்த்துக்கள்.
>
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>



-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060929/edfa28de/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list