Re: debian-installer மொழிபெயர்ப்பு

மு.மயூரன் mmauran at gmail.com
Tue Sep 26 06:51:35 BST 2006


திவா,

ஒரு கோப்பை முழுமையாக பொறுப்பெடுத்து செய்வது என்ற ஒன்று எனக்கு உடன்பாடில்லை.

அப்படி நான் செய்வதுமில்லை


பெரும்பாலும் மற்றவர்கள் செய்தவற்றை மேலோட்டமாக பார்வையிட்டு சிறு சிறு
மாற்றங்கள் தேவைப்படுமிடத்து செய்கிறேன். அவர்கள் மொழிபெயர்க்காமல் விட்ட
பகுதிகளை மொழிபெயர்க்கிறேன்.

அத்தோடு மிக மிக முக்கியமாக கருதும் கோப்புக்களை  கவனம் செலுத்தி
மொழிபெயர்க்கிறேன்.

நீங்கள் இப்படி எழுதியபிறகுதான் இந்தவிசயம் உறைத்தது.
சிலவேளை நீங்கள் ஒரு கோப்பினை பொறுப்பெடுத்து செய்யும்போது அதில் தலையிடுவது
தொந்தரவாக இருக்கக்கூடும் என இப்போதுதான் உணர்கிறேன்.
அப்படி ஏதும் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
கோப்பு பெரிதாக இருப்பதால் நானும் இணைந்துகொள்வது உங்கள் பணியை சுலபமாக்கும்
என்று கருதியே இணைந்துகொண்டேன்.

திறந்த மூல விருத்தி வடிவதில் எல்லோரும் தம்மாலியன்றதை செய்தல் தான் அடிப்படை.
அத்தோடு எதுவும் முழுமையானதாகவோ முற்றுப்பெற்றதாகவோ இருக்காது.

12ம் திகதி அவ்வளவு முக்கியத்துவம் மிக்க எல்லைக்கோடு இல்லை என்றே
நினைக்கிறேன். (சில மென்பொருட்களுக்கு முக்கியம்) ஏனென்றால் மொழிப்பொதிகள்
தரவிறக்கத்தான் கிடைக்கிறதே தவிர இறுவட்டுக்குள் அடக்கப்படுவதில்லை. நாங்கள்
செய்யகூடிய பணிகளை செய்துகொண்டு போனால், காலத்துக்கு காலம் பூர்த்தியடைந்த
பணிகளை வைத்து இற்றைப்படுத்தப்பட்ட பொதிகள் தரவிறக்கத்துக்கு
வழங்கப்படுமில்லையா?

debian-installer ஐ பொறுத்தவரை எல்லைக்கோடு பிரச்சனைதான்.

நீங்கள் பொறுப்பேற்றுக்கொண்ட அந்த கோப்பினை மொழிபெயர்த்து முடிப்பதற்கு நானும்
உதவினால் உங்களுக்கு இலகுவாக இருக்குமானால் தொடர்கிறேன்.

தொந்தரவாக இருக்குமானால் வேறு கோப்புக்களை செய்யலாம். நிறைய கோப்புக்கள்
காத்திருக்கின்றன.

பதிலுக்கு நன்றி திவா.

அத்தோடு இன்னொரு முக்கியமான விசயம்,

இந்த உபுண்டு தமிழ் குழுமத்தில் புதிதாக ஒருவர் இணைந்துகொள்ள எங்கே
போகவேண்டும், என்ன செய்யவேண்டும்?


-மு.மயூரன்



On 9/26/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> i have uploaded the work done on deb installer so far to rosetta.
> for whatever it is worth.
> once it is updated you can download it if you care and work on *that*
> perhaps the work may become easier.
> upto you.
> tv
>
> On 9/26/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
> >
> > எடுத்துக்காட்டு:
> >
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>



-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060926/726c891c/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list