அடுத்த உபுண்டு பதிப்பை சோதனை செய்தல்

மு.மயூரன் mmauran at gmail.com
Wed Sep 20 21:10:34 BST 2006


அனைவரதும் கவனத்திற்கு,

உபுண்டுவின் அடுத்தபதிப்பான 6.10  வெளிவரும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
திட்டமிட்டபடியான மொழிபெயர்ப்பு வேலைகளை தாண்டியும் நாம் செய்யவேண்டிய சில
பணிகளை கவனப்படுத்த விரும்புகிறேன்.

அண்மையில் வெளிவந்த ஏதாவதொரு சோதனைப்பதிப்பை நாம் சோதிக்கவேண்டும்.
உபுண்டுவில் தமிழை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு.
ஆகவே தமிழ் வசதிகள் யாவும் அடுத்தபதிப்பில் சரியாக வேலைசெய்யுமா என்பதை
நாம்தான் சோதித்து உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பினை எடுத்துக்கொள்ளவேண்டும்.

உபுண்டு விருத்தியாளர்களுடன் மேல்நிலை கலந்துரையாடல்களை செய்து எமக்கு
தேவைப்படும் மேலதிக வசதிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பின்வரும் விடயங்கள் சோதனை செய்யப்படவேண்டியன:

1. உபுண்டுவை நிறுவி எந்த மாற்றங்களும் செய்யாத நிலையில் தமிழ் ஒருங்குறியில்
அமைந்த வலைத்தளங்களை சரியாக பார்க்க முடிகிறதா? எல்லா உலாவிகளிலும்?

2. scim, scim-m17n, scim-tables, tamil gtk-im ஆகியன சரியாக எல்லா
செயலிகளிலும் வேலை செய்கின்றனவா? (குறிப்பாக firefox, openoffice)

3. கோப்புக்களுக்கு தமிழில் பெயரிட முடிகிறதா?

4. வின்டோஸ் fat32, ntfs வகிர்வுகளில் உள்ள தமிழில் பெயரிட்ட கோப்புக்களை எந்த
பிரசனையும் இல்லாமல் பார்வையிட முடிகிறதா?

(மேலும்...)


கேட்டுப்பெறவேண்டிய வசதிகள்

1. முதல்முறை உபுண்டுவை இறுவட்டிலிருந்து நிறுவிக்கொண்ட உடனேயே மேலதிக பொதிகள்
எதையும் நிறுவவேண்டியிராமல், scim, m17n, tables தமிழ் விசைப்பலகை வடிவங்களை
பயன்படுத்தத்தக்கதாக இருத்தல் (தம்ழை மட்டுமல்ல எல்லா மொழிகளையும்
கொண்டிருத்தல்)

2. language-support-ta பொதியினை மேலதிகமாக நிறுவவேண்டியிராமல், நிறுவலின் போதே
அதையும் நிறுவிக்கொள்ளத்தக்கதாக்குதல்

(மேலும்...)


இதுபற்றி ஏனைய நண்பர்களும் உரையாடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

சோதனைக்கு என்னிடம் வீட்டிலோ அலுவலகத்திலோ மேலதிக கணினிகள் இல்லை. ஆனால் சோதனை
செய்ய முன்வருபவர்களுக்கு பல வழிகளிலும் உதவ தயாராக இருக்கிறேன்.
யார் முன்வந்து சோதனை பணிகளை செய்யப்போகிறீர்கள்?


தோழமையுடன்

மு.மயூரன்

-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060921/8879ee97/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list