[உபுண்டு_தமிழ்]Ramdoss, please clarify ! - Open letter for group members

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Mon Oct 30 09:05:36 GMT 2006


//to me it does not clash with any primary objective as i understand
-translation.//

வாசுதெவன், நீங்கள் சரியான புள்ளியை தொட்டிருக்கிறீர்கள்.

சின்னம் குறித்த என்னுடைய முதல் மடலில் மிகுந்த நட்புரிமையுடனும்,
கவனிக்கப்படாமல் விடப்பட்ட சிறு தவறு ஒன்றை சுட்டிக்காடுட்ம் தோழமை
உணர்வுடனுமேயே இதுபற்றி பேசினேன்.

நான் பங்குபற்றும் திறந்த மூலம், அரசியல் தொடர்பான அமைப்புக்களில் இத்தகைய
தோழமையுணர்வு நிரம்பியிருந்தது.
அங்கெல்லாம் இவ்வாறான கருத்துக்களை நான் முன்மொழிந்தவண்ணமே இருக்கிறேன்.

உங்களுக்கு இந்த சின்னம் மனத்தடைகளை தரவில்லை.
ஒன்று, நீங்கள் அதனை இந்து மத சின்னமாக பார்ஞ்க்காமலிருந்திருக்கலாம், அல்லது
நீங்கள் ஒரு இந்துவாக இருப்பதால் அது ஒரு பெரிய விடயமாக இருந்திருக்காது.

ஆனால் இந்து அல்லாத எனக்கு அது ஒரு உறுத்தலாக இருந்தது.

நான் முதலாவதாகவும் கடைசியாகவும் இருந்த மதம் so called இந்துமதம் தான். அந்த
பின்னணியில் எனக்கு அது பிள்ளையார் சுழியாகத்தான் தெரிந்தது.

எனக்கு அது மனத்தடையை ஏற்படுத்தியது. ஆனாலும் சின்னத்தை பேசி மாற்றிக்கொள்ளலாம்
தானே என்ற உணர்வுடனேயே எனது பணிகளை செய்துவந்தேன்.

பின்னர் இந்த குழுவோடு நெருக்கமாக செயற்படும் முழுமையான இந்து-அடிப்படையிலான
குழுவான சமர்ப்பணம் பற்றி அறிய வாய்ப்பு ஏற்பட்டபிறகு இந்த மனத்தடை எனக்கு
மிகவும் அதிகமானது.

ரவி இதனை முதலில் சுட்டிக்காட்டினார்.

நானும் நான் உணர்ந்த மனத்தடையை வெளிப்படுத்தினேன்.

என்னுடைய மடல்களை பார்த்தீர்களானால், மற்றவருடைய ஆர்வத்தை ஆதரித்து
உற்சாகப்படுத்தும் விதமாகவே நான் இயங்கிவந்திருக்கிறேன்.
எனக்கு பிடித்த மென்பொருள் ஒன்றுக்கான, எனக்கு பிடித்த தத்துவம் ஒன்றுக்கான
எனது மொழிக்குழு என்ற உணர்வில் தான் இங்கே நான் ஈடுபாட்டோடு இயங்குகிறேன்.

பத்தாயிரம் பேர் சேர்ந்து இயங்கும் குழுவானாலும் ஒரு தனி மனிதனுக்கு
உளத்தடைகள், உறுத்தல்கள் ஏற்படுமிடத்தில் அதற்கான சிறப்பு கவனம்
செலுத்தப்படவேண்டும்.

அதுதான் திறந்தமூல செயற்பாடுகளின் அடிப்படை.

ஆனால் எனக்கு மனத்தடை ஏற்படுகிறது என்று அறியத்தந்தபோது என்க்கு ராமதாசாலும்
உங்களாலும் வழங்கப்பட்டபதில்,

"அது அப்படித்தான், நாங்கள் அதை பிள்ளையார் சுழியாகபார்க்கவில்லை. அப்படித்தான்
இருக்கும் நீ வாயை மூடிக்கொண்டு மொழிபெயர்ப்பு வேலையை மட்டும் பார்"

என்பதாகத்தான் இருந்தது.

சாதாரணமாக இருந்த மனத்தடை, சின்னம் தொடர்பான விஷயத்தை தாண்டி இங்கே இக்குழுவில்
இருக்கிற அதிகாரம் தொடர்பான மனத்தடியாக மாறிப்போனது.

அதன் பின் உபுண்டு தமிழ் வலைத்தளம் என்ற பெயரில் ராமதாஸ் வைத்திருக்கும் அவரது
தனிப்பட்ட வலைத்தளத்தை பார்க்கக்கூட எனக்கு பிடிக்காமல் போனது.

வேறு குழுக்களாக இருந்தால் உடனடியாக நான் விலகியிருப்பேன். எனக்கு பல வேலைகள்
உண்டு.

ஆனால் இங்கிருந்து நான் விலகுவது உபுண்டு தமிழ் செய்ற்பாடுகளிலிருந்து
விலகுவதாகிவிடும்.
அது சரியல்ல.

என்னால் தமிழ் லினக்ஸ் உலகிற்கு, உபுண்டுவிற்கு காத்திரமான பங்களிப்பை வழங்க
முடியும். என்னால் இக்குழுவிலிருந்து விலக முடியாது.


இங்கே என்னுடைய, மற்றைய உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு நீங்கள்
மதிப்பளிபதாய் தெரியவில்லை.

சின்னம் பற்றிய சர்ச்சையை நான் ஏற்படுத்தியபின்னரும்கூட அந்த சின்னத்தை நீங்கள்
செய்த கையெழுத்து வேட்டைக்கு எப்படி பயன்படுத்துவீர்கள்?

என்ன உரிமை உங்களுக்கு அந்த சின்னத்தின்மீது இருக்கிறது?

இதுபற்றி குழுவினரோடு நீங்கள் உரையாடினீர்களா?

குழுவினரோடு உரையாடாம அச்சின்னத்தை உங்கள் பணிகளுக்கு பயன்படுத்தும்போது அந்த
பயன்பாடு செல்லுபடியற்றது.

தொடர்ந்தும் ஏதேச்சாதிகாரமான முடிவுகளையே நீங்கள் எடுத்துவருகிறீர்கள்.

ஏதேச்சாதிகார முடிவுகளை எடுக்கும் ஒருவர் இப்படியான திறந்த மூல குழுக்களின்
தலைமையை ஏற்க முடியாது.
ராமதாஸ் இந்த குழுவுக்கு தலமை தாங்குவதற்கு பொருத்தமற்றவராகவே நான்
கருதுகிறேன்.

அவர் இங்கே தலைமை தாங்குவது திறந்த மூல செயற்பாடுகளுக்கும் உபுண்டுவின்
ஒழுக்கத்துக்கும் அவப்பெயரை உண்டாக்குவதாகவே இருக்கிறது.

சின்னம் மட்டுமல்ல, உங்கள் எதேச்சாதிகார மனநிலையும் சேர்ந்தே இந்த பிரச்சனையை
இவ்வளவு பெரிதாக மாற்றியிருக்கிறது.

முதலில் போய் குழும உணர்வையும், லிபரல் சிந்தனைகளையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.
அதற்குபிறகு வந்து சமுதாய இயக்கங்களில் பங்கெடுங்கள்.

உங்கள் குறுகிய வட்டத்துள் நிற்கும் சிந்தனைகளால் சமுதாய நடவடிக்கைளுக்கு மாசு
கற்பிக்கவேண்டாம் என்று தயவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

சின்னம் எனக்கு மனத்தடையை தருகிறதென்றால் நான் பொய் சொல்ல தேவையில்லை

எனக்கு அது தடையாக இருக்கிறது என்ற உண்மையை தான் சொன்னேன்.

உனக்கு அது தடையாக இருக தேவையில்லை என்று சொல்லும் அதிகாரதை நீங்கள்
கையிலெடுத்தால், அது என்னை வெளியே போ என்று சொல்வதாகத்தான் அர்த்தப்படும்.
அதனையே நீங்கள் நேரடியாக ரவிக்கு சொன்னீர்கள். நாளை எனக்கு சொல்வீர்கள்.

என்னை வெளியே போ என்று சொன்னால் ராமதாசை வெளியே போகச்சொல்லி என்னால் சொல்ல
முடியும்.


ஏனென்றால் உபுண்டுவும், உள்ளூர் குழுமஙளும் உறுப்பினர்களுக்கு சொந்தமானது.
தலைவர்களுக்கு அல்ல. முதலில் உபுண்டு தத்துவ ஆவணங்களை சரியாக படியுங்கள்.

-மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061030/91ba70e5/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list