[உபுண்டு_தமிழ்]தமிழுக்கு தேவையான பொதிகள்

Sethu skhome at gmail.com
Sun Oct 29 18:30:22 GMT 2006


முகுந்த்


> அட்டகாசமாக வேலை செய்கிறது. நான் தற்போது தமிழ்நெட்99 கீபோர்ட்க்கு
> எ-கலப்பையில் உள்ளதுபோல் Alt + 2 hotkeys (அதேபோல் ஆங்கிலத்திற்கு Alt +1)
> அமைத்துவிட்டேன்.
>
> அதனால் தற்போது எனக்கு விண்டோஸில் உள்ளதுபோலவே தமிழை எங்கும் உள்ளிடமுடிகிறது.
>
> நன்றி நன்றி.

scim-m17n இன் தமிழ்99 இல் இன்னும் தமிழக அரசாணை (
http://www.tamilvu.org/Tamilnet99/annex2.htm) இல் சட்டங்கள் 9,10, 11
ஆகிய மூன்றுக்கும் இதுவரை இணக்கமாகவில்லை (that is, it is still non
-compliant to 3 keystroke requirements: 9,10 and 11 as in Annexure 2
of TN Gov. Chief Sec's order in 1999).

m17n க்கு m17n - தமிழ்99 வி.ப  உள்ளிடும் redhat இன் indic குழுவினர்
அக்குறைகளை இன்னும் சில வாரங்களுக்குள் நிவர்த்தி செய்யாவிடின் நானே
முயற்சி எடுத்து அதற்கான விசைக்குறிகளை (keystrokes) எழுதி அவர்களுக்கு
அனுப்பலாம் என உள்ளேன் (இது வரை அவை சிரம்மானதாக தெரியவில்லை - ஆனால்
எழுத ஆரம்பித்தால்தான் உறுதியாக தெரியும்).

m17n-tamil99 போலல்லாது, தாங்கள் சக தமிழா மேம்பாட்டாளர்கள் குழுமம்
எம்.எஸ் விண்டோசுக்குு உருவாக்கிய எ-கலப்பையில்லுள்ள tamil99 மேற்கூறிய
தமிழக அரசாணையில் கோரப்பட்ட எல்லா 12 அவசியங்களையும் நிறைவேற்றுகிறது,
ஒரே ஒரு குறை தவிர - அது சட்டம் 10க்கு ஏற்ப bullet symbol தராமையாகும்.
இதை முன்னர் எழுதினேன் - பார்க்க:
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2006-October/000186.html

இன்னும் சில தினங்களுக்குள் scim-tables, m17n முறைகளுக்கான எனது
ஒப்பீடுகளுடன் நாம் ஏன் அடுத்த கட்டமாக kmfl முறைமையை  scim பின்முகமாக
பரிசோதிப்பது பயன்மிக்கது என்ற என் வாதங்களை ஒரு மடலாக எழுதுகிறேன்.

முகுந்த் kmfl முறை பற்றி தாங்கள் அறிந்து வைத்துள்ளீர்களா?

எ-கலப்பை வி.பலகைகள் அனைத்தும் லினக்சுக்குள் பிரவேசிப்பதில் தாங்கள்தான்
  "keyman" ஆக இருப்பீர்கள்  என்பது என் கணிப்பு.  <pun intended> ;>)

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list