[உபுண்டு_தமிழ்]தமிழ் உபுண்டு சின்னம் குறித்து..

senthil raja senthil.nkkl at gmail.com
Sun Oct 29 16:20:04 GMT 2006


Hi,

First of all, let me aplogize for not able to write my mail in Tamil. I
havent setup my keyboard layout, and i am not used to typing in tamil. I
will learn it very soon.

I am senthilraja, working as a software engineer in a MNC. I am new member
to this tamil ubuntu team and joined today. From the ravi's mail, i could
understand he has some issue with the ubuntu tamil logo.

Before expressing my views, i would like to understand the background of
this issue.

Ravi and other members.. could you please give me a short intro to the
issue... Ravi had expressed that there was no discussion over this logo. If
that is the problem, then lets have the discussion here.

Hope, you wont be having any problem in accepting me in the discussion.

Thanks & Regards,

Senthil Raja



On 10/29/06, Ravi shankar <* ravidreams_03 at yahoo.com*<ravidreams_03 at yahoo.com>>
wrote:

ராமதாஸ்,

தமிழ் உபுண்டு சின்னம் பிரச்சினை குறித்த உங்கள் பதிலும் அணுகுமுறையும் கவலை
அளிக்கிறது.

எழுப்பப்படும் பிரச்சினை குறித்த திறந்த உரையாடல் ஏதும் இல்லாமல், இது
இப்படித்தான், இதை மாற்ற முடியாது என்று சொல்வது குழு ஒருங்கிணைப்பாளரான
உங்களுக்கு எந்த விதத்திலும் கண்ணியம் சேர்க்காது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?


நீங்கள் குழு ஒருங்கிணப்பாளர் தானே தவிர, குழுத் தலைவர் கிடையாது. இது போன்ற
திட்டங்களில் அது போல் தலைவர் யாரும் இருக்கவும் முடியாது. குழுவின் நீண்ட கால
நன்மை குறித்த பொறுப்பை தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் கையில் எடுத்துக்
கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு நாள் முன்னர் நானோ வேறு சிலரோ இந்தக்
குழுமத்தைத் தொடங்கி விட்டு நான் சொல்வது தான் இறுதி என்றால் நீங்கள் எல்லா
விதயத்திலும் ஏற்றுக் கொள்வீர்களா? இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை
உங்களுக்குத் தந்தது யார்? மன்னிக்கவும் - தலைவர் முடிவே இறுதி, வளைந்து
கொடுக்க மாட்டோம் என்று அடிவருடும் சிந்தனையில் நான் வளராதது என் பிழை தான்..

மயூரன், சேது, முகுந்த் என்று இக்குழுவில் மதிக்கத்தக்க பங்களித்து வரும்
பலரின் ஆலோசனையை புறந்தள்ளி விட்டு உங்கள் முடிவில் இறுதியாக இருப்பது என்ன
நியாயம்?

ஒரு வேளை சின்னத்தின் உட்பொருள் அறியாமல் நீங்கள் வடிவமைத்து விட்டீர்களோ என்று
எண்ணி தான் இது வரை கண்ணியமாகவும் நிதானமாகவும் இந்த விதயத்தில் உரையாடி
வந்திருக்கிறேன்..ஆனால், நீங்கள் அறிந்தே செய்திருப்பதால் என்ன செய்வது என்று
யோசிக்கிறேன்?

நல்லா இருக்க சின்னத்த மாத்தி சிலுவையையோ பிறைக்குறியையோ போட்டு பிளவு படுத்தச்
சொல்ல வில்லை நாங்கள்..பிழையாக இருக்கும் சின்னத்தை தான் தமிழுக்குப் பொதுவாக
மாற்றச் சொல்கிறேன்? இதில் யார் பிளவு படுத்திப் பார்க்கிறார்கள் என்று
மூன்றாம் வகுப்புப் பிள்ளைக்கு கூடத் தெரியும். பகுத்தறிந்து கருத்துக்களை முன்
வைப்பவர்கள் வக்கிரப்புத்தி உடையவர்கள் என்றால் அந்த வக்கிரத்தை தொடர்ந்து
செய்ய நான் விரும்புகிறேன்.

இந்த சின்னத்துக்கு ஆதரவு தந்து மடலிடும் சமர்ப்பணம் குழுவினரின் செய்கை நகைக்க
வைக்கிறது. தங்கள் தளம் முழுதும் துர்க்கைப் படமும், ஓம் குறியும், வேலாயுதமும்
இட்டு வைத்திருப்பவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்? இப்படி
கூட்டம் சேர்த்து உங்கள் உள்நோக்கப் பரப்புகளுக்காக ஆள் சேர்க்கிறீர்கள் என்று
தெளிவாகத் தெரிகிறது.

சின்னம் வரையப்பட்டு ஒரே நாளில் இந்தப் பிரச்சினையை எழுப்பினேன். அப்பொழுது
மொழிபெயர்ப்பு மும்முரம், பின்னர் பார்க்கலாம் என்றீர்கள்..இப்பொழுது சின்னம்
பிரபலமாகி விட்டது , மாற்ற முடியாது என்கிறீர்கள்..நல்ல கூத்து இது..நியாயமான
செயல்பாடு என்றால் சின்னத்தை முடக்கி வைத்திருக்க வேண்டும்? மாற்று
வடிவமைப்புகளை செய்து கருத்துகளை கேட்டிருக்க வேண்டும்..

ஆப்பிள், மைக்ரோசாப்ட் என்ற பெரிய நிறுவனங்களே தேவைக்கும் காலத்துக்கும் ஏற்ப
சின்னங்களை மாற்றுகின்றன. இதில் தமிழ் உபுண்டு குழு எம்மாத்திரம்? யாரையும்
கலந்தாலோசிக்காமல் ஒரு சின்னத்தை போட்டது பெரிய பிழை..அதை மாற்ற முடியாது என்று
அடம் பிடிப்பது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு..உங்களைப் போன்ற ஒருவரின் கையில்
தமிழ் உபுண்டு மாட்டிக் கொண்டதற்கு வருத்தப்படுகிறேன்..

தனி மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக பல பொதுத் தமிழ்த் திட்டங்கள்
முடங்குவது வருத்தமளிக்கிறது..இப்படி செயல்படுபவர்கள் இன்னொரு சுஜாதாவின் ழ
லின்ஸ் திட்டச் செயல்பாடுகளை விமர்சிக்க எந்தத் தகுதியையும் வளர்த்துக் கொள்ளப்
போவதில்லை. இந்தச் சின்னத்தை மாற்றினால் இன்னும் சிலரை இந்தத் திட்டத்தில்
இணையச் செய்யலாம் என்கிறோம் நாங்கள். இதை மாற்ற முடியாது என்று சொல்லி சிலரை
திட்டத்துக்குப் பங்களிக்கத் தயங்கச் செய்வதின் நியாயம் என்னவோ?

இந்த விதயத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்களின் தர்க்கம் சகிக்க வில்லை..
பாவம், ரிச்சர்ட் ஸ்டால்மேன் அவரை விட்டு விடுங்கள்..புனித ஜார்ஜ் கோட்டை
கிறிஸ்தவப் பெயர் என்று வாதிடுவதன் மூலம் உங்கள் சிந்தனை வளம் தெரிகிறது.

நேற்று, மாற்றுச் சின்ன வடிவமைப்புகள் குறித்து பலரும் தெரிவித்த கருத்துகள்
பெறுமதி வாய்ந்தவை. பல திட்டங்களுக்கும் ஒரு நியமமாகச் செய்யத் தகுந்தவை.

இந்து சமய நோக்கு இல்லை என்றால் அதை மாற்ற வேண்டியது தானே? இல்லை, பரப்புவது
தான் உங்கள் நோக்கம் என்றால் இந்து உபுண்டு பதிப்பு ஒன்று தொடங்கலாமே? யாரும்
ஆட்சேபிக்கப் போவதில்லை. இப்படி தமிழ் அடையாளத்துடன், நடுநிலை தமிழரின்
உழைப்பைச் சுரண்டி முத்திரை இட்டுக் கொள்வது அல்பத்தனமாக இருக்கிறது.

இது ஒரு சிறிய பிரச்சினையும் அல்ல..சின்னப் பிரச்சினையும் அல்ல..ஒரு
அணுகுமுறைப் பிரச்சினை, மனப்பாங்குப் பிரச்சினை..இந்த மனப்பாங்கு திட்டத்தின்
பல செயற்பாடுகளிலும் தொனிக்கும் என்பது தான் என் கவலை..

இந்த விதயத்தில் http://www.ubuntu.com/community/conduct தளத்தில் காணப்படும்
நடத்தை நெறிகளில் ஒன்று கூடத் துளியும் பின்பற்றப்படவில்லை. உபுண்டுவை, லினக்சை
நமக்கு விரும்பிய சாயம் பூசி பரப்பும் பொட்டலம் என்று நீங்கள் நினைத்தால்
ஒன்றும் செய்ய இயலாது. மென்பொருள், நுட்பம் தாண்டி அது ஒரு சிந்தனை, வாழ்க்கை
நெறி. அடுத்தவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுப்பது அதன் அடிப்படைக் கொள்கை. தள
நிர்வாக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு முரண்டு பிடிப்பது உபுண்டு கொள்கை
அல்ல.

இது போன்ற செய்பாடுகளால்,உபுண்டு கொள்கை, திறந்த நிரலாக்கம், கூட்டுழைப்பு
போன்ற கொள்கைகளை நீங்கள் புரிந்து கொண்டதாகத்

தெரியவில்லை. அவற்றுக்கும் இழுக்கும் சேர்க்கிறீர்கள்.

இந்த விதயத்தில் தனித்துச் சிந்திக்க வல்லவர்கள் தங்கள் கருத்துகளை தந்து
மடலிட்டால் நன்றாக இருக்கும். அது கூட நேர விரயம் என்று அவர்கள் நினைத்தால்,
நான் ஆச்சர்யப்பட மாட்டேன்.

ரவ
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061029/3502fa0d/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list