[உபுண்டு_தமிழ்]தமிழ் உபுண்டு சின்னம் குறித்து..

Sivakumar Ramamurthy sivakumar.ramamurthy at gmail.com
Sun Oct 29 12:03:42 GMT 2006


I accept the logo in its current form.

I do not want any change in it. It is neutral to me.


On 10/29/06, Ravi shankar <ravidreams_03 at yahoo.com> wrote:
>
> ராமதாஸ்,
>
> தமிழ் உபுண்டு சின்னம்  பிரச்சினை குறித்த உங்கள் பதிலும் அணுகுமுறையும் கவலை
> அளிக்கிறது.
>
> எழுப்பப்படும் பிரச்சினை குறித்த திறந்த உரையாடல் ஏதும் இல்லாமல், இது
> இப்படித்தான், இதை மாற்ற முடியாது என்று சொல்வது குழு ஒருங்கிணைப்பாளரான
> உங்களுக்கு எந்த விதத்திலும் கண்ணியம் சேர்க்காது
> என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?
>
> நீங்கள் குழு ஒருங்கிணப்பாளர் தானே தவிர, குழுத் தலைவர் கிடையாது. இது போன்ற
> திட்டங்களில் அது போல் தலைவர் யாரும் இருக்கவும் முடியாது. குழுவின் நீண்ட கால
> நன்மை குறித்த பொறுப்பை தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் கையில்
> எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு நாள் முன்னர் நானோ வேறு சிலரோ
> இந்தக் குழுமத்தைத் தொடங்கி விட்டு நான் சொல்வது தான் இறுதி என்றால் நீங்கள்
> எல்லா விதயத்திலும் ஏற்றுக் கொள்வீர்களா? இறுதி முடிவு எடுக்கும்
> அதிகாரத்தை உங்களுக்குத் தந்தது யார்? மன்னிக்கவும் -  தலைவர் முடிவே இறுதி,
> வளைந்து கொடுக்க மாட்டோம் என்று அடிவருடும் சிந்தனையில் நான் வளராதது என் பிழை
> தான்..
>
> மயூரன், சேது, முகுந்த் என்று இக்குழுவில் மதிக்கத்தக்க பங்களித்து வரும்
> பலரின் ஆலோசனையை புறந்தள்ளி விட்டு உங்கள் முடிவில் இறுதியாக இருப்பது
> என்ன நியாயம்?
>
> ஒரு வேளை சின்னத்தின் உட்பொருள் அறியாமல் நீங்கள் வடிவமைத்து விட்டீர்களோ
> என்று எண்ணி தான் இது வரை கண்ணியமாகவும் நிதானமாகவும் இந்த விதயத்தில் உரையாடி
> வந்திருக்கிறேன்..ஆனால், நீங்கள் அறிந்தே செய்திருப்பதால் என்ன செய்வது
> என்று யோசிக்கிறேன்?
>
> நல்லா இருக்க சின்னத்த மாத்தி சிலுவையையோ பிறைக்குறியையோ போட்டு பிளவு
> படுத்தச் சொல்ல வில்லை நாங்கள்..பிழையாக இருக்கும் சின்னத்தை தான்
> தமிழுக்குப் பொதுவாக மாற்றச் சொல்கிறேன்? இதில் யார் பிளவு
> படுத்திப் பார்க்கிறார்கள் என்று மூன்றாம்
> வகுப்புப் பிள்ளைக்கு கூடத் தெரியும். பகுத்தறிந்து
> கருத்துக்களை முன் வைப்பவர்கள் வக்கிரப்புத்தி உடையவர்கள் என்றால் அந்த
> வக்கிரத்தை தொடர்ந்து செய்ய நான் விரும்புகிறேன்.
>
> இந்த சின்னத்துக்கு ஆதரவு தந்து மடலிடும் சமர்ப்பணம் குழுவினரின் செய்கை
> நகைக்க வைக்கிறது. தங்கள் தளம் முழுதும் துர்க்கைப் படமும்,
> ஓம் குறியும், வேலாயுதமும் இட்டு வைத்திருப்பவர்களிடம் இருந்து வேறு
> என்ன எதிர்ப்பார்க்க முடியும்? இப்படி கூட்டம் சேர்த்து உங்கள் உள்நோக்கப்
> பரப்புகளுக்காக ஆள் சேர்க்கிறீர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது.
>
> சின்னம் வரையப்பட்டு ஒரே நாளில் இந்தப் பிரச்சினையை எழுப்பினேன்.
> அப்பொழுது மொழிபெயர்ப்பு மும்முரம், பின்னர் பார்க்கலாம்
> என்றீர்கள்..இப்பொழுது சின்னம் பிரபலமாகி விட்டது ,  மாற்ற முடியாது
> என்கிறீர்கள்..நல்ல கூத்து இது..நியாயமான செயல்பாடு
> என்றால் சின்னத்தை முடக்கி வைத்திருக்க வேண்டும்? மாற்று வடிவமைப்புகளை செய்து
> கருத்துகளை கேட்டிருக்க வேண்டும்..
>
> ஆப்பிள், மைக்ரோசாப்ட் என்ற பெரிய நிறுவனங்களே தேவைக்கும் காலத்துக்கும்
> ஏற்ப சின்னங்களை மாற்றுகின்றன. இதில் தமிழ் உபுண்டு குழு
> எம்மாத்திரம்? யாரையும் கலந்தாலோசிக்காமல்
> ஒரு சின்னத்தை போட்டது பெரிய பிழை..அதை மாற்ற முடியாது என்று
> அடம் பிடிப்பது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு..உங்களைப் போன்ற ஒருவரின் கையில்
> தமிழ் உபுண்டு மாட்டிக் கொண்டதற்கு வருத்தப்படுகிறேன்..
>
> தனி மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக பல பொதுத்
> தமிழ்த் திட்டங்கள் முடங்குவது வருத்தமளிக்கிறது..இப்படி செயல்படுபவர்கள்
> இன்னொரு சுஜாதாவின் ழ லின்ஸ் திட்டச் செயல்பாடுகளை விமர்சிக்க எந்தத்
> தகுதியையும் வளர்த்துக் கொள்ளப் போவதில்லை. இந்தச் சின்னத்தை மாற்றினால்
> இன்னும் சிலரை இந்தத் திட்டத்தில் இணையச் செய்யலாம்
> என்கிறோம் நாங்கள். இதை மாற்ற முடியாது என்று சொல்லி சிலரை திட்டத்துக்குப்
> பங்களிக்கத் தயங்கச் செய்வதின் நியாயம் என்னவோ?
>
> இந்த விதயத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்களின் தர்க்கம்
> சகிக்க வில்லை..பாவம், ரிச்சர்ட்
> ஸ்டால்மேன் அவரை விட்டு விடுங்கள்..புனித ஜார்ஜ் கோட்டை கிறிஸ்தவப் பெயர்
> என்று வாதிடுவதன் மூலம் உங்கள் சிந்தனை வளம் தெரிகிறது.
>
> நேற்று, மாற்றுச் சின்ன வடிவமைப்புகள் குறித்து பலரும் தெரிவித்த
> கருத்துகள் பெறுமதி வாய்ந்தவை. பல திட்டங்களுக்கும் ஒரு நியமமாகச் செய்யத்
> தகுந்தவை.
>
> இந்து சமய நோக்கு இல்லை என்றால் அதை மாற்ற வேண்டியது தானே? இல்லை,
> பரப்புவது தான் உங்கள் நோக்கம் என்றால் இந்து உபுண்டு பதிப்பு
> ஒன்று தொடங்கலாமே? யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. இப்படி
> தமிழ் அடையாளத்துடன், நடுநிலை தமிழரின் உழைப்பைச் சுரண்டி முத்திரை
> இட்டுக் கொள்வது அல்பத்தனமாக இருக்கிறது.
>
> இது ஒரு சிறிய பிரச்சினையும் அல்ல..சின்னப் பிரச்சினையும் அல்ல..ஒரு
> அணுகுமுறைப் பிரச்சினை, மனப்பாங்குப் பிரச்சினை..இந்த மனப்பாங்கு திட்டத்தின்
> பல செயற்பாடுகளிலும் தொனிக்கும் என்பது தான் என் கவலை..
>
> இந்த விதயத்தில் http://www.ubuntu.com/community/conduct தளத்தில்
> காணப்படும் நடத்தை நெறிகளில் ஒன்று கூடத் துளியும் பின்பற்றப்படவில்லை.
> உபுண்டுவை, லினக்சை நமக்கு விரும்பிய சாயம் பூசி பரப்பும் பொட்டலம் என்று
> நீங்கள் நினைத்தால் ஒன்றும் செய்ய இயலாது. மென்பொருள், நுட்பம் தாண்டி அது ஒரு
> சிந்தனை, வாழ்க்கை நெறி. அடுத்தவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுப்பது அதன்
> அடிப்படைக் கொள்கை. தள நிர்வாக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு முரண்டு
> பிடிப்பது உபுண்டு கொள்கை அல்ல.
>
>
> இது போன்ற செய்பாடுகளால்,உபுண்டு கொள்கை, திறந்த நிரலாக்கம், கூட்டுழைப்பு போன்ற கொள்கைகளை நீங்கள் புரிந்து கொண்டதாகத்
> தெரியவில்லை. அவற்றுக்கும் இழுக்கும் சேர்க்கிறீர்கள்.
>
> இந்த விதயத்தில் தனித்துச் சிந்திக்க வல்லவர்கள் தங்கள் கருத்துகளை தந்து
> மடலிட்டால் நன்றாக இருக்கும். அது கூட நேர விரயம்
> என்று அவர்கள் நினைத்தால், நான் ஆச்சர்யப்பட மாட்டேன்.
>
> ரவி
>
>
>
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
Sivakumar.R
Chief Operations,
Shradha Solutions,
Chennai
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061029/a712f490/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list