[உபுண்டு_தமிழ்]கட்டற்ற மென்பொருள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் துவங்கிவிட்டது...

Ravi shankar ravidreams_03 at yahoo.com
Sun Oct 29 09:19:44 GMT 2006


----- Original Message ----
From: Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com>
To: "உ, ப, ு, ண, ், ட, ு, த, ம, ி, ழ, ், க, ு, ழ, ு, ம, ம, ி, ன, ், ன, ஞ, ், ச, ல, ், ப, ட, ், ட, ி, ய, ல, ்," <ubuntu-l10n-tam at lists.ubuntu.com>
Sent: Sunday, October 29, 2006 8:26:27 AM
Subject: Re:[உபுண்டு_தமிழ்]கட்டற்ற மென்பொருள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் துவங்கிவிட்டது...



//மற்ற விஷயம் குறித்து எனக்கு பலமான கருத்துக்கள் இருந்தாலும் முன்னே எடுத்துக் கொண்ட முடிவு படி இது பற்றி எழுதுவதாக இல்லை.
ஒரு உயர்ந்த நோக்கத்திற்கு ஆரம்பித்த வேலை பார்வை வித்தியாசங்களால் கெட்டு விடுமோ என அஞ்சுகிறேன். இப்படியே போனால் குபுண்டு தலித்துக்கானது என்றெல்லாம் பேசப்படலாம். 

இந்த விவாதங்களை தவிர்த்து நம் வேலையை பார்க்க வேண்டும் என வேண்டுகிறேன்.
தமிழ் வலை பூக்களை சற்றே பார்த்த அளவில் ஏதாவது சண்டையிட்டுக் கொண்டிருப்பதே தமிழன் குணமோ எனத் தோன்றுகிறது.
திவா//


திவா,

சண்டை பிடிப்பது வேறு. மாற்றுக் கருத்துக்களை கண்ணியத்துடன் அலசுவது வேறு. வக்கிரம், தமிழன் குணம் என்றெல்லாம் சொற்களை பயன்படுத்தி, உரையாடலின் தரத்தையும் திசையையும் கண்ணியத்தையும் யாரும் கீழுழுக்க வேண்டாம் என்று வேண்டுகிறேன்.

தமிழ் வலைப்பூக்களில் நடக்கும் சேறு பூசல்களுக்குபம் இதற்கும் துளியும் ஒற்றுமை கிடையாது.

மாற்று சிந்தனை, நோக்கு, செயல்பாடுகள் இருந்ததால் தான் திறவூற்று இயக்கமே வந்தது. இந்த திட்டத்திலேயே வந்து மாற்று பார்வை கூடாது என்று சொன்னால் எப்படி? மாற்றுப் பார்வை தான் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். தலைவர் சொல்வது எல்லாம் சரி என்று சொல்லிக் கொண்டிருந்தால் வெள்ளைக்காரனுக்கு கீழ் இன்னும் குல்லா போட்டு சலாம் அடித்து குமாஸ்தாவகத் தான் இருந்திருப்போம். ஸ்வதேச
 மென்பொருள் பரப்பும் சமர்ப்பணம் இயக்கங்களும் வந்திருக்காது ;)

இது வரை கருத்தளவில் தான் இந்த விதயத்தில் விமர்சித்து வந்திருக்கிறேன் (ராமதாசுக்கான கடைசி மடல் தவிர.). தயவு செய்து தனி மனித விமர்சனங்களைத் தூண்டும் வகையில் மறுமொழிகளைத் தர  வேண்டாம்.

ரவி

-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061029/2c7e416b/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list