[உபுண்டு_தமிழ்]தமிழுக்கு தேவையான பொதிகள்

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Sat Oct 28 16:04:17 BST 2006


இந்த மடலோடு சில பொதிகளை நெருக்கப்பட்ட நிலையில் அனுப்புகிறேன்.

ஒரு புதிய எட்ஜி நிறுவலில் எந்த விதமான இணைய இணைப்பும் இல்லாமல் இந்த பொதிகளை
மட்டும் நிறுவிக்கொண்டால் scim உள்ளீட்டு அமைப்புக்கள், தமிழ் இடைமுகப்பு,
தமிழ் ஆதரவு போன்றன நிறுவிக்கொள்ளப்பட வேண்டும்.

யாராவது முடிந்தால் இதனை சோதித்து பார்க்கவும்.

சோதனைகளுக்கு பின் நாங்கள் இப்படியான பொதித்தொகுப்பு ஒன்றை இறுதிப்படுத்தி
இணையத்தில் ஏற்றி வைத்துவிட்டோமானால், இணைப்பு உள்ள, இல்லாத அத்தனை
பயனர்களுக்கும் இப்பொதிகளை நிறுவிக்கொண்டால் மிக இலகுவாக தமிழ் ஆதரவினை
பெற்றுக்கொண்டு விடுவர்.

இது மிக மிக அடிப்படையான பொதித்தொகுப்பு.

sudo dpkg - i *.deb

என்ற ஆணை மூலம் எல்லா பொதிகளையும் நிறுவலாம். இதனை மேலும் மேம்படுத்தி install
script ஒன்றின் உதவியுடன் உள்ளார்ந்த அமைப்புக்களையும் செய்துகொள்ளத்தக்கதாக
தனிப்பொதி ஒன்றினை உருவாக்க திட்ட்ம்.

முதற்கட்டமாக இந்த தொகுப்பை சோதித்து உதவவும்.

மு.மயூரன்


-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061028/61750b6b/attachment-0001.htm 
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: debs.tar.gz
Type: application/x-gzip
Size: 3578293 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061028/61750b6b/attachment-0001.bin 


More information about the Ubuntu-l10n-tam mailing list