[உபுண்டு_தமிழ்]தமிழ்நெட்99 வேலைசெய்கிறது :)

Ravi shankar ravidreams_03 at yahoo.com
Sat Oct 28 14:40:58 BST 2006


தற்பொழுது என் உபுண்டு இயங்கு தளத்தில் இருந்து ஓபன் ஆபிசு, கெயிம் உள்ளிட்ட அனைத்து செயலிகளிலும் தமிழ்நெட்99 விசைப்பலகை முறையில் எழுத முடிகிறது. (விண்டோசில் கெயிம், யாகூ மெசன்ஜர் ஆகியவற்றில் எ-கலப்பை இயங்க மறுக்கிறது. முகுந்த கவனிக்கலாம். ஆனால், இது எ-கலப்பை பிரச்சினையாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். அந்தந்த செயலிகளின் பிரச்சினையாக இருக்கலாம்.) 

இந்த விதயத்தில் மயூரன் பெரிதும் உதவினார். அவரின் அணுகுமுறையின்படி எந்த ஒரு விசைப்பலகை முறையையும் நிறுவிப் பயன்படுத்தலாம் போல் உள்ளது. அனேகமாக, இது குறித்த குறிப்புகளை அவர் விரைவில் தருவார் என்று நினைக்கிறேன்.

லினக்சு இலவசம், திறம் வாய்ந்தது என்பதை தாண்டி, நாம் நினைத்ததை மற்றவரின் உதவியோடு நாமே செய்து கொள்ளலாம் என்ற உணர்வு தரும் இன்பத்துக்காகவே உபுண்டுவைத் தொடர்ந்து பயன்படுத்துகிறேன். என் புண்ணியத்தில் இன்னும் சிலரும் பயன்படுத்த தொடங்கி இருககிறார்கள்.

தவித்த வாய்க்குத் தண்ணீரை கூட காசு வாஙகிக் கொண்டு தரும் உலகத்தில், உபுண்டு தத்துவம் நம் மரபு சார் வாழ்க்கை முறைக்கு ஒத்திருப்பது கண்டு மகிழ்கிறேன். சரி, என் feelingsஐ இத்துடன் முடித்துக் கொள்கிறேன் :)

ரவி
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061028/17cd46eb/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list