[உபுண்டு_தமிழ்]தற்போது நான் பயன்படுத்துவது உபுண்டு 6.10 !

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Fri Oct 27 16:16:59 BST 2006


வணக்கம்.

இப்போதுதான் எட்ஜி யை நிறுவி முடித்தேன்.
சில தடைதாண்டல்களுக்கு பிறகு  இயல்பாக தமிழில் பார்க்க, எழுத முடிகிறது.
முழுமையான வழிகாட்டி குறிப்புக்களை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அதற்கிடையில் அவசரமாக உள்ளீட்டு முறைகளை தேடிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்காக
இந்ந்த மடல்.

m17n மென்பொருள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தான் என்னுடைய பழைய பொதிகளை
நிறுவியும் நண்பர்கள் உள்ளீட்டு முறைகளை எட்ஜியில் பெற முடியாதிருந்ந்தது.

நிறைய இற்றைப்படுத்தல்கள் நிகழ்ந்துள்ளது.

விபரங்கள் பிறகு தருகிறேன்.

புதிய இற்றைப்படுத்தல்களுக்கு பொருந்ந்திப்போகக்கூடியவண்ணம், இந்ந்த பொதியை
என்னுடைய ஆவரங்கால் உள்ளீட்டு முறையையும் சேர்த்து பொதிசெய்திருக்கிறேன்.

இதனை நிறுவிக்கொண்டால் பிரசனை இல்லாமல் ஒலியியல், தமிழ் 99 விசைப்பலகைகளை
பயன்படுத்த முடியும்.

தமிழ் 99 இன் 12 சட்டங்களை இவ்விசைப்பலகை பின்பற்றாவிட்டால் அதுகுறித்து இங்கே
மடலிடவும் மாற்றங்களை செய்துகொள்ளலாம்.

முதலில் synaptic இனை பயன்படுத்தி

libm17n
m17n-db
scim-m17n

ஆகிய பொதிகளை நிறுவிக்கொள்ளவும்.
அதன்பின் நான் இணைத்து அனுப்பும் இந்த பொதியை நிறுவவும்.

scim-setup சென்று வேண்டிய அமைப்புக்களை செய்துகொள்ளவும்.

ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் பதில்மடலிடுங்கள்.


தோழமையுடன்
மு.மயூரன்




-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061027/09000de3/attachment-0001.htm 
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: m17n-contrib_1.0.0-1_i386.deb
Type: application/x-debian-package
Size: 59124 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061027/09000de3/attachment-0001.deb 


More information about the Ubuntu-l10n-tam mailing list