[உபுண்டு_தமிழ்]தமிழ் உபுண்டு tips and tricks, முகுந்த் கவனிக்க.

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Fri Oct 27 10:53:29 BST 2006


விகடன், மற்றும் பிற ப்[அத்திரிகைகளின் தளங்கள் தொடர்பான இந்த உரையாடல்
நீண்டுகொண்டு போகிறது.
இது ஏதோ firefox இன் பிரச்சனை என்பது போன்ற பார்வை பொதுவான பயனர் மட்டத்தில்
உள்ளது.

இது மிக மிக தவறான பார்வை.

மேற்கண்ட தளங்களை வடிவமைப்பவர்களுடைய அறிவுப்பற்றாக்குறையே இதற்கான காரணம்.
எந்த ஒரு நல்ல வலைத்தள வடிவமைப்பாளரும் குறித்த ஒரு உலாவிக்கென தளங்களை
வடிவமைப்பதில்லை.

அதற்குத்தான் w3 சான்றிதழ்கள் போன்ற தரப்படுத்தல்கள் உள்ளன.

இந்த உலகத்தில் IE ஐயும் வின்டோசையும் தவிர வேறு தெரிவுகளும் உண்டு என்பதை
அறிந்திராத, அறிந்திருக்க விரும்பாத தொழிநுட்பச்சோம்பேறிகள் வலைத்தளங்களை
வடிவமைக்க வெளிக்கிடுவதால் வரும் வினை இது.

உத்தமம் போன்ற நிறுவனங்கள், தமிழ் கணினி இயல் ஆர்வலர்கள் ஒருங்குசேர்ந்து தமிழ்
கணிமையின், தமிழ் இணைய உள்ளடக்கங்களின் எதிர்கால நலன்களை, தேவைகளை
கருத்தில்கொண்டு சில நுட்பியல் நியமங்களை கொண்டுவந்திருக்கிறார்கள்.
ஒருங்குறி, ஒருங்குறி முடியாத நிலையில் தகுதரம் என்று ஒரு நியமம் இருக்கிறது.
இந்த நியமத்தை மதிக்கப்பழகவேண்டும். இது ஒரு நுட்பியல் ஒழுக்கம்.

இந்த ஒழுக்கத்தை பின்பற்றாது, வியாபார நலன்களுக்காகவும்,
அறிவுப்பற்றாக்குறையாலும் ஒழுக்கக்கேடாக நடந்துகொள்பவர்களுக்கு நாங்கள்
வளைந்துகொடுக்க வேண்டியதில்லை.

eot என்கிற மைக்ரோசொப்டின் ஏகாதிபத்திய கருவியை எதிர்த்து வாய்கிழிய கத்தியு,ம்
இன்றும் பல தளங்கள் கற்கால எழுத்துருக்களை போட்டு இயங்கு எழுத்துருவில்
உளடக்கத்தை தருகிறார்கள்.

விகடனுக்கும், தினமணிக்கு தம்முடைய தனியுரிமை எழுத்துக்களை நீடித்து
நிலைக்கச்செய்வதிலுள்ள ஆர்வம், கூடிச்சிந்தித்து நன்னோக்கங்களுடன்
கொண்டுவரப்பட்ட நியமங்களை பின்பற்றுவதில் இல்லை.

இந்த தளங்களை சேர்ந்தவர்கள் ஒரு வகையில் தொழிநுட்ப சமூக விரோதிகள். இவர்களுக்கு
தண்டனை தான் பதிலாக அமையுமே அல்லாமல் சமரசங்கள் அல்ல.

எம்முடைய பார்வை மாற வேண்டும்.

இந்த தளங்களை பார்க்க முடியாமலிருந்தால் அதைப்பற்றி முறைப்பாடு செய்யவேண்டியது
லினக்ஸ், ஃபயர் ஃபாக்ஸ் குழுமங்களில்  அல்ல.
அந்த தளங்களுக்கே நீங்கள் முறைப்பாடு செய்யவேண்டும்.

அவர்கள் தான் உங்களுக்கு தீர்வு தர வேண்டும்.
இது அவர்கள் பிரசனை. அவர்கள் ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வதால் வருகிற பிரச்சனை.
அவர்களுக்கு நீங்கள் பெறுமதி மிக்க வாசகர்களாக இருந்தால் உங்களுக்கான தீர்வினை
செய்து தரட்டும்.

இல்லாவிட்டால் அவர்களை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை.

இந்த பிரச்சனை எழும்போதெல்லாம் அவர்களுடன் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்து
தொல்லை கொடுங்கள்.
இந்த ஒழுக்கக்கேடுகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு வரட்டும்.

அதுதான் சரியான வழி.
அதுதான் தமிழ் இணைய உள்ளடக்கத்தின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமான வழி


தோழமையுடன்
மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061027/c546ab30/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list