[உபுண்டு_தமிழ்]இறுதி நேர சோதனைகள்

Sethu skhome at gmail.com
Tue Oct 24 21:10:52 BST 2006


மயூரன்

> நான் நேற்று உங்களிடமிருந்து பெற்றுவந்த சோதனைப்பதிப்பை சோதித்தபோது பின்வரும்
> பிரச்சனைகளை இனம்கண்டேன்.
>
> 1. நிறுவி தமிழுக்கு மாற்றப்படும்போது தமிழ் எழுத்துக்கள் பிய்ந்து தெரிகின்றன.
>
நமது சந்திப்பை முடித்துக்கொள்ள சற்று முன் இதை நீங்கள் எனது கணினியில்
போட்டுக்காட்டினீர்கள் - மறந்து விட்டீர்களா?

> இதற்கான தீர்வு இரண்டு.
> அ. தமிழுக்கு மாற்றப்படும்போதோ, அல்லது இயல்பிருப்பாகவீ தொகுதியின் எழுத்துரு
> serif இற்கு மாறவேண்டும். அல்லது தமிழை சரியாக காட்டக்கூடிய வேறு
> எழுத்துருக்களுக்கு மாற்ற வேண்டும்.

மற்றைய எழுத்துருக்கள் பற்றி:

i. 3 TAMu வகையைச் சேர்ந்தவைகள் : பயன் இல்ல்லை - ஏனெனில் இவை ஓர் மொழி
(mono-lingual) எழுத்துரு - நிறுவியில் பல இடங்களிலும் ஆங்கிலம்
இருக்கின்றன

ii. Lohit-Tamil - எனது சோதனையின் போது இது சரியாகவே செயல்பட்டது

iii. TSCu - வகை - 3 உள்ளன. அவற்றுள் TSCu-Paranar சோதித்தேன். முதலில்
பார்வைக்கு சரியாகத் தெரிந்தாலும் 4 வது படியில் சில பிரச்சினைகள்
உள்ள்ளன - இம்மடலுடன் இனைக்கப்பட்டுள்ள கோப்பில் png பார்க்கவும்

> ஆ. தமிழை சரியாக கண்பிக்க மறுக்கும் எழுத்துருக்கள் உபுண்டுவிலிருந்து
> நீக்கப்படவேண்டும்.
>
>
> 2. இப்போது gtk செயலிகளிலிருந்து அச்சிடும்போது பிரச்சனைகள் இல்லை. ஆனால்
> firefox இலிருந்து அச்சிடும்போது பிரச்சனை ஏற்படுகிறது. (நிகழ்வட்டிலிருந்தவாறே
> இதனை சோதித்தேன்).
> தளத்தில் தமிழ எழுத்துக்கள் சரியாக தெரிகின்றன. அச்சிடல் முன்காட்சி
> பார்க்கும்போதும் எழுத்துக்கள் சரியாக இருக்கின்றன. ஆனால் postscript கோப்பு
> ஒன்றினை உருவாக்கினாலோ அல்லது அச்சிட்டாலோ எழுத்துக்கள் பிய்ந்துவிடுகின்றன.
> எழுத்து மாற்றம் எல்லாம் செய்துபார்த்தேன்.
>
> எனவே பிரச்சனை postscript இல் தான் இருப்பதாக படுகிறது.
> நான் சொன்னதுபோல் libpaps சேர்க்கப்படவேண்டும். இதனை உபுண்டுவின் வழுவாக பதிவு
> செய்யவும்.
>
>
"வழுவாக பதிவு" என்றால் ?

> -மு.மயூரன்

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list