[உபுண்டு_தமிழ்]உபுண்டு எட்ஜி வெளியீட்டுக் குறிப்புகள்!
ஸ்ரீ ராமதாஸ்
shriramadhas at gmail.com
Sat Oct 21 14:25:47 BST 2006
உபுண்டு எட்ஜி அக்டோபர் மாதக் கடைசியில் வெளிவர உள்ளது. இந்தப் புதிய வெளியீட்டிற்காக
உபுண்டு உருவாக்கக் குழு முழுவீச்சில் பணியாற்றி வருகிறது. பல புதிய அம்சங்களை
ஒருங்கே கொண்டதாய் இவ்வெளியீடு அமையும். குநோம் மற்றும் இயங்குத் தளமானது முன்பை விட
விரைவில் துவங்குவதற்கான ஏற்பாடு, பழகுவதற்கு எளிமையானத் தோற்றம், மேம்படுத்தப் பட்ட
கெர்னல் மற்றும் பல சிறப்பம்சங்களைக் கொண்டதாய் இவ்வெளியீடு அமையும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எட்ஜியை நிறுவ:
குறு வட்டுகள் மற்றும் குறிப்புரைகளை BitTorrent
<https://help.ubuntu.com/community/BitTorrent> பக்கத்தின் துணைக் கொண்டு
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எட்ஜி வெளியீட்டின் அறிவிப்புப் பக்கத்தில்
<https://wiki.ubuntu.com/EdgyReleaseCandidateAnnouncement> குறிப்பிடப்
பட்டுள்ள முகவரிகளிலிருந்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உபுண்டு 6.06 லிருந்து நேரடியாக மேம்படுத்த:
உபுண்டு 6.06 லிருந்து 6.10 க்கு மேம்படுத்த விரும்பினால், கீழ்காணும் கட்டளையை
முனையத்தின் (Terminal) மூலமாகவோ அல்லது Alt-F2 மூலமாகவோ கொடுக்கவும்.
gksu "update-manager -c -d"
மேற்கண்ட கட்டளையில் "-d" யானது, இவ்வெளியீட்டோடு சேர்த்து முந்தைய வெளியீடுகளையும்
கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு உபுண்டுவை மேம்படுத்த உதவும் செயலிக்கு (Application)
அறிவுறுத்தும். "-d" இல்லாது போனால் தற்போதைய வெளியீடுகள் மட்டுமே கருத்தில் கொள்ளப் படும்.
"-c" அனைத்து விதமான மேம்பாடுகளையும் கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தும். ஏனெனில்
உபுண்டு 6.06 வெளியீடானது அதிக நாட்களுக்கான ஒத்துழைப்பு உத்திரவாதத்துடன் அதிக
உறுதியுடன் திகழ்வதால் இவ்வசதியைத் தானாக செய்துத் தராது.
இணைய இணைப்பொன்றினை தற்சமயம் தாங்கள் பெற்றிருக்கும் பட்சத்தில், புதிய வெளியீடு குறித்து
உணர்த்துவதோடு இயங்குதளத்தை மேம்படுத்தவும் இது வழிவகுக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
apt-get பயன்படுத்தி மேம்படுத்த:
மேம்படுத்த உதவும் செயலி இல்லாத, சேவக (Server) பயன்பாடுகள் முதலிய காரணங்களுக்காக
பயன்பத்தப் படும் கணினிகளில் மேம்படுத்த கீழ்கண்ட கட்டளைகளைப் பயன்படுத்தவும்,
முதலில் apt-get dist-upgrade கட்டளைக் கொடுக்கவும்.
இக்கட்டளையானது இயங்குதள துவக்கத் திற்கான செயலிகளை விடுத்து மற்ற அனைத்தையும்
மேம்படுத்தும். பின்னர் மீண்டும் இதே கட்டளையை apt-get dist-upgrade கொடுத்தால் போதும்
அனைத்து செயலிகளும் மேம்படுத்தப் பட்டுவிடும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உபுண்டுவின் துணைக் கொண்டு உலகம் சுற்ற உபுண்டு தமிழ் குழுமம் அன்புடன் அழைக்கிறது.
http://www.ubuntu-tam.org/tamizh/?q=node/22
இது குறித்த தங்களின் கருத்துக்களை அறிய ஆவல்.
--
அன்புடன்,
ம . ஸ்ரீ ராமதாஸ்
Stepwise instructions - to view Unicode Tamil text
1. You need to have Unicode Tamil fonts installed on your computer and
the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP
comes with a Unicode Tamil Font (Latha) and you need not
download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to
ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape
6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the
default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts
may be downloaded from here. <http://www.tamilnation.org/fonts/latha.ttf>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061021/2895f51e/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list