[உபுண்டு_தமிழ்]இரண்டாம் கட்ட சோதனை..

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Sat Oct 21 10:54:03 BST 2006


ஒவ்வொரு முறையும் export பண்ணிக்கொண்டிருக்க தேவையில்லை.

/etc/environment இல் பின்வரும் வரியினை சேர்த்தால் சரி.

MOZ_ENABLE_PANGO=1

இந்த பணியினை language-support-ta பொதி தன்னியக்கமாக செய்கிறது.

ஆனால் இதனை சாதாரண பயனருக்கு சொல்லிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்பதுதான்
பிரச்சனை.
இப்படி எத்தனையோ குறிப்புக்களை கொடுத்தபிறகு, அதனை செய்த பிறகே தமிழ் பயனர்
ஒருவரால் உபுண்டுவை பயன்படுத்த முடிகிறதென்றால்.....

-மு.மயூரன்


On 10/21/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> இயங்குத் தளத்தை  மீண்டும் துவக்கிய பின்னர் SCIM தானாக துவக்கப்
> பட்டிருந்தது. ("On reboot.png" பார்க்கவும்)
>
> Firefox மீண்டும் துவக்கிய போது SCIM நினைவேற்றப் (Load?) பட்டிருந்தது.
> ஆனால் தட்டச்சு செய்யும் போது முன்பு இருந்த அதே எழுத்துரு பிரச்சனை
> தொடர்ந்த்து :-( "SCIM Input Enabled in Firefox.png" பார்க்கவும்)
>
> சேதுண்ணா சொல்லிய படி முனையத்திலிருந்து export MOZ_DISABLE_PANGO=0 கட்டளை
> கொடுத்தாகிவிட்டது... ;-)
>
> சேதுண்ணா  தூள்... ("After giving export command.png" பார்க்கவும்) :-)
>
> அடுத்து மிஞ்சி இருப்பது ஓபன் ஆஃபீஸ்...
>
> முதலில் "DejaVu Sans" எழுத்துரு கொண்டியங்கியதால் சற்றே  சோர்வுடன்
> காணப்பட்ட எழுத்துக்கள் "தமிழ் மதுரம்" எழுத்துருவை தேர்வு செய்தவுடன்
> பொலிவுடன் காட்சித் தருகின்றன.. ("SCIM Input method in OO.png" பார்க்கவும்)
>
>
> https://launchpad.net/distros/ubuntu/+source/firefox/+bug/67296 ல்
> பிரச்சனையைத் தெரியப் படுத்தியிருந்தேன். சேதுண்ணாவின் தீர்வை தற்போது
> பரிந்துரைத்துள்ளேன். பார்த்து குறிப்புகள் சேர்க்க வேண்டுமாயின் சேர்க்கவும்.
>
> ****************************
> இரண்டாம் கட்ட சோதனை முடிவுற்றது
> ****************************
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>
>


-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061021/61f4608b/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list