[Ubuntu_Tamil] எங்கள் நிறுவனத்தில் இயங்கும் GNew குழுமம் குறித்து...

ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Wed Oct 11 19:46:43 BST 2006


வணக்கம்,

எங்கள் நிறுவனத்தில் GNew என்று GNU/ லினக்ஸ் க்கான குழுமம் அமைத்தேன்.

இருபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள்.

இதற்கு Special Interest Group ஆக எம் நிறுவன அங்கீகாரம் கிடைத்ததோடு மிகச் சிறிய 
அளவிலான நிதி உதவியும் கிட்டியுள்ளது.

மேலும் நாளை இக்குழுவின் முதற் சந்திப்பு நடை பெற உள்ளது. உபுண்டு GNU/ லினக்ஸ் இயங்கு 
தளத்தை நிறுவுதல் குறித்த அறிமுக நிகழ்ச்சியாக இது இருக்கும்.

மேலும், இந்தியாவில் கேரள அரசு பள்ளிப் பாடத்திட்டங்களில் (8ம் வகுப்பு துவங்கி) GNU/ 
லினக்ஸ் இயங்கு தளத்தை சேர்த்த விஷயங்களைப் பாராட்டியும் அதே  போன்று தமிழக அரசு அடுத்த 
கல்வியாண்டிலிருந்தாவது பாடத்திட்டத்தில் சுதந்திர மென் பொருள் குறித்த பாடங்களை இணைக்க 
வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும் என கோரப் போகிறேன்.

இது குறித்த விவரங்களை நாளை நிகழ்ச்சி முடிந்ததும் மேலும் பகிர்ந்து கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்.

-- 
அன்புடன்,
ம . ஸ்ரீ ராமதாஸ்

Stepwise instructions - to view Unicode Tamil text

1. You need to have Unicode Tamil fonts installed on your computer and 
the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP 
comes with a Unicode Tamil Font (Latha) and you need not 
download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to 
ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 
6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the 
default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts 
may be downloaded from here. <http://www.tamilnation.org/fonts/latha.ttf>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061012/a9640295/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list