[Ubuntu_Tamil] புது உபுண்டு தமிழ் தளம் குறித்த வினாக்கள், ஆலோசனைகள்

ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Wed Oct 11 04:27:54 BST 2006


2. create page, create story இரண்டுக்கும் வேறுபாடு என்ன? இவற்றின் மூலம் 
என்னென்ன மாதிரியான ஆக்கங்களை சேர்க்கலாம்? எடுத்துக்காட்டுக்கள் தந்தால் நன்றாக இருக்கும்?

blog entry <http://www.ubuntu-tam.org/tamizh/?q=node/add/blog>
    A blog is a regularly updated journal or diary made up of individual
    posts shown in reversed chronological order. A blog is tightly
    coupled to the author so each user will have his 'own' blog.
book page <http://www.ubuntu-tam.org/tamizh/?q=node/add/book>
    A book is a collaborative writing effort: users can collaborate
    writing the pages of the book, positioning the pages in the right
    order, and reviewing or modifying pages previously written. So when
    you have some information to share or when you read a page of the
    book and you didn't like it, or if you think a certain page could
    have been written better, you can do something about it.
page <http://www.ubuntu-tam.org/tamizh/?q=node/add/page>
    If you want to add a static page, like a contact page or an about
    page, use a page.
story <http://www.ubuntu-tam.org/tamizh/?q=node/add/story>
    Stories are articles in their simplest form: they have a title, a
    teaser and a body, but can be extended by other modules. The teaser
    is part of the body too. Stories may be used as a personal blog or
    for news articles.

மேற்கூறப்பட்டவை அந்தந்தப் பதங்களுக்கான Drupalன் விளக்கங்கள். உதாரணங்களுக்கு சற்று நேரம் 
வேண்டும்.

Ravi shankar wrote:
> ராமதாஸ்,
>  
> புது தமிழ் உபுண்டு தமிழ் தளம் குறித்து சில ஐயங்கள், ஆலோசனைகள்.
>  
> 1. இது தமிழ் உபுண்டுவுக்கான அதிகாரப்பூர்வத் தளமா? ஆம் என்றால், தளத்தில் குறிப்பிடுங்கள்.
> 2. create page, create story இரண்டுக்கும் வேறுபாடு என்ன? இவற்றின் மூலம் 
> என்னென்ன மாதிரியான ஆக்கங்களை சேர்க்கலாம்? எடுத்துக்காட்டுக்கள் தந்தால் நன்றாக இருக்கும்?
> 3. தமிழ் உபுண்டு சின்னத்தில் உள்ள உ - வுக்கு அடியில் உள்ள கோட்டை நீக்குதல் நன்று. 
> இல்லாவிட்டால் இது பிள்ளையார் சுழி போல் இருக்கிறது என்ற திரிப்பு சர்ச்சை நாளை 
> வரலாம். அதை முதலில் பார்த்தவுடன் எனக்கு பிள்ளையார் சுழி தான் நினைவுக்கு 
> வந்தது. சமயங்கள் தாண்டி தமிழுக்குப் பொதுவாக இருப்பது போல் சின்னம் இருப்பது நன்று.
> 4. இம்மடலாடற்குழு, தமிழ் உபுண்டு விக்கி, தமிழ் உபுண்டு தளம் இவற்றுக்கு இடையில் 
> பயன்பாட்டு, பங்களிப்பு வகையில் என்ன வேறுபாடுகள் இருக்க வேண்டும்? அதாவது 
> வலைப்பதிவு போன்ற பதிவுகளுக்கு மட்டும் உபுண்டு தளம், கையேட்டு வரைவுகளுக்கு விக்கி 
> தளம், உரையாடல்களுக்கு என்று மடலாடற்குழுவா? இதை தெளிவுபடுத்தலாம். தமிழ் 
> உபுண்டு விக்கி தளத்தில் இல்லாத என்ன விதயங்களை உபுண்டு தமிழ் தளத்தில் சேர்க்கலாம்? 
> இல்லை, உபுண்டு விக்கி தளத்தில் இருக்கிற என்னென்ன விதயங்களை உபுண்டு தமிழ் விக்கி 
> தளத்தில் சேர்க்கலாம்? உபுண்டு விக்கி தளத்தில் செய்ய இயலாத எந்தப் பணியைச் செய்வதற்கு 
> உபுண்டு தமிழ் தளத்தை களமாக கொள்ளலாம்.?
> 5. அப்புறம், ubuntu உச்சரிப்பையும் புதுப் பயனர்களுக்கு தெளிவாக அறியத்தருமாறு 
> உபுண்டுவுக்கான எழுத்துக்கூட்டலை மாற்றுவது குறித்தும் பரிசீலிக்கலாம். ubuntu 
> அருமையான பொருள் தரும் ஆபிரிக்க வார்த்தையாக இருக்கிறது. அதை 
> இயன்ற அளவு சிதைக்காமல் தமிழில் தந்தால் நன்றாக இருக்கும். உபுண்டு பயன்பாடு பெருகி 
> உபுண்டு என்ற உச்சரிப்பே நிலைத்து விட்டால் பிறகு அதை மாற்ற இயலாமல் போய் விடும். 
> தமிழை டமில் என்று ஆங்கிலேயர்கள் சொல்லும் போது நமக்கு உவப்பாக இல்லை அல்லவா? அந்த 
> அவமரியாதையை நாம் ஏன் ஆபிரிக்கர்களுக்கு செய்ய வேண்டும்? oo-boon-too என்பது தான் 
> சரியான உச்சரிப்பு என்பது போல் எங்கோ படித்த நினைவு. முன்னர், 
> இம்மடலாடற்குழுவிலும் இது தெரிவிக்கப்பட்டது. /உபுண்டு/ என்பதை மாற்றி /ஊபூண்ட்டு/ 
> என்று எழுதினால் மூல மொழி உச்சரிப்புக்கு நெருக்கமாக வரலாம் என நினைக்கிறேன். 
> இவ்வுச்சரிப்பையும் எழுத்துக்கூட்டலையும் பிற பயனர்கள் 
> சரி பார்த்து விரும்பினால் செயற்படுத்தலாம். எந்த மாற்றத்தை செய்வதனாலும் 
> இப்பொழுது தான் சரியான நேரமாக இருக்கும்.
>  
> அன்புடன்,
> ரவி
>


-- 
அன்புடன்,
ம . ஸ்ரீ ராமதாஸ்

Stepwise instructions - to view Unicode Tamil text

1. You need to have Unicode Tamil fonts installed on your computer and 
the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP 
comes with a Unicode Tamil Font (Latha) and you need not 
download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to 
ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 
6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the 
default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts 
may be downloaded from here. <http://www.tamilnation.org/fonts/latha.ttf>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061011/9d3daad0/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list