[Ubuntu_Tamil] ubuntu-tam.org பதியப் பட்டுவிட்டது..

Sethu skhome at gmail.com
Tue Oct 10 06:36:45 BST 2006


வணக்கம் நண்பர்களே

எனது கருத்துக்களை ubuntu-tam.org இல் சில வினாடிகள் முன்உள்ளிட்டேன்.
இதுவரை அத்தளத்தில் பயனாராக இனையாதோர் இருக்கலாம். அதனால் இதோ என்
பதிப்பின் பிரதி:

> முதலில் சிறு திருத்தம்:
> ஏற்கனவே பயனர்களால் தமிழில் பெயரிடப்பட்டுள்ளவாறு "விக்சனரி" என்றே கூறலாமே. "விகிஷனரி" என்று அழைப்பதை தவிர்ப்போம்.  பல மாதங்கள் முன் நான் விக்சனரி பயனராக ("கா.சேது") ஒரு சில வார்த்தைகள் (ஆங்கில்ம்-->தமிழ்) சேர்த்தேன். அதன்பின் அப்பக்கம் போக நேரம் அமையவில்லை. இனிமேல் அவ்வப்போது முடிந்தளவில் பங்கு கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.
>
> திரு முகுந்தராஜ் முன்னர் தமிழினிக்ஸ் மற்றும் தமிழா மேம்பாட்டாளர் மடலாற்ற குழுமங்களில் ஒரு சில முறைகள் தமிழ் அகராதிகளின் பதிபுரிமைகள் காரணமாக அவைகளின் அனுமதிகள் கேட்கவேண்டியிருக்கும் என்ற கருத்தையோ (அல்லது கேட்க வேண்டுமா என்ற வினாவையோ) முன் வைத்தாக என் நினைவில் உள்ளது. அக்காலங்களில் இவை பற்றி மேலும் கருத்துப் பறிமாற்றங்கள் தீவிரமாக நடைபெற்றிருக்கவில்லை என்பது என் கணிப்பு.
>
> எத்தகைய சொற்களின் மொழிபெயர்ப்புகளுக்கு இன்னொரு நிறுவனித்தினதோ தனி நபரினதோ அனுமதி கேட்பது அவசியம் அல்லது அவசியமில்லை என்பது போன்ற வினாக்களும் ஒரு அகராதியை உருவாக்குகையில் பதிப்புரிமை சம்பந்தமாக  ஏற்படக்கூடிய  பிரச்சினைகளை உருவாக்குவோர் எவ்வாறு முன்கணிப்பு செய்து தம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவர் என்பவைகள் பற்றிய அறியாமைகளும் என் மனதில் தற்போது.
>
> இவை பற்றி கருத்து பரிமாற்றன்களை இங்கோ அல்லது வேறு தகுந்த மடலாற்ற குழுமத்தில் முகுந்தராஜ் மீண்டும் தொடக்கி நடத்தினால் நன்ராக இருக்கும். எம் எல்லாருக்கும் பயன் அளிக்கும்.
>
> விக்சனரியின் நிர்வாகிகளில் ஒருவரான திரு ரவி (அ. ரவிசங்கர்) நமது ubuntu-tamil மடலாற்ற குழுமத்தில் இனைந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. அவரும் தமது கருத்துக்களை அளிப்பர்ர் என விரும்புகிறேன்.
>
> கா. சேது

~சேது

On 10/10/06, Muguntharaj Subramanian <mugunth at gmail.com> wrote:
>
>
> வணக்கம் மயூரன் மற்றும் நண்பர்களே,
> > தொடருங்கள் ஆமாச்சு.
> >
> > முகுந்த் என்ன சொன்னார்? ;-)
>
> பெரிசா ஒன்னும் சொல்லைங்க :)
>
> நணபர் ராமதாஸை சந்தித்தபோது உரையாடியதில் முக்கியமாக கீழ்கண்ட விசயங்களைப்
> பேசினோம்.
> 1. பொதுவான ஒரு கலைச்சொல் அகராதியின் தேவை. - இதற்கு நான் தமிழ் விக்ஸனரியை (
> http://ta.wiktionary.org )) பலப்படுத்திப் பயன்படுத்தலாம் என்று கருத்து
> தெரிவித்தேன்.
> மொழிபெயர்க்கும்போதே புதிய வார்த்தைகள் அனைத்தையும் http://ta.wiktionary.org
> இல் இட்டு வைத்தால் அடுத்ததாக மொழிபெயர்க்க வருவோர்க்கு மிக சுலபமாக இருக்கும்.
>
> மேலும் http://ta.wiktionary.org ஐ தரவுத்தளமாக பயன்படுத்து வகையில் நாம்
> சொல்லகராதி மென்பொருட்களை எழுதமுடியும்.
>
> மேலும் வாரம் ஒருநாள் நம் குழுவிலுள்ளவர்கள் தமிழ் விக்ஸனரி உள்ளீடும் நாளாக
> கடைபிடிக்கலாம். அந்த நாளில் மொழிபெயர்க்கும் பணிகளுக்குப் பதிலாக இதுவரை
> மொழிபெயர்த்த வார்த்தைகளை தமிழ் விக்ஸனரியில் உள்ளிடலாம். இதன் மூலம் தமிழ்
> விக்ஸனரி பலப்படும், அதனால் வருங்கால தமிழ்கணினி முயற்சிகளுக்கு வலுவான
> அடித்தளம் நாம் இட முடியும்.
>
> 2. உபுண்டு மற்றும் மற்ற திறவூற்று மென்பொருட்களை கல்லூரி மற்றும் பள்ளிகளில்
> பிரபலபடுத்த முயற்சி எடுக்கவேண்டும். குறிப்பாக அங்குள்ள ஆசிரியர்களுக்கு
> இவற்றைப்பற்றி தெரியப்படுத்தவேண்டும்.
>
> அன்புடன்,
> முகுந்த்
>
>
> --
> Mugunth
>
> http://mugunth.blogspot.com
> http://thamizha.com
> http://tamilblogs.com
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


More information about the Ubuntu-l10n-tam mailing list