[Ubuntu_Tamil] ubuntu-tam.org பதியப் பட்டுவிட்டது..

Muguntharaj Subramanian mugunth at gmail.com
Tue Oct 10 05:29:49 BST 2006


வணக்கம் மயூரன் மற்றும் நண்பர்களே,

தொடருங்கள் ஆமாச்சு.
>
> முகுந்த் என்ன சொன்னார்? ;-)


பெரிசா ஒன்னும் சொல்லைங்க :)

நணபர் ராமதாஸை சந்தித்தபோது உரையாடியதில் முக்கியமாக கீழ்கண்ட விசயங்களைப்
பேசினோம்.
1. பொதுவான ஒரு கலைச்சொல் அகராதியின் தேவை. - இதற்கு நான் தமிழ் விக்ஸனரியை (
http://ta.wiktionary.org )) பலப்படுத்திப் பயன்படுத்தலாம் என்று கருத்து
தெரிவித்தேன்.
மொழிபெயர்க்கும்போதே புதிய வார்த்தைகள் அனைத்தையும் http://ta.wiktionary.org
இல் இட்டு வைத்தால் அடுத்ததாக மொழிபெயர்க்க வருவோர்க்கு மிக சுலபமாக இருக்கும்.

மேலும் http://ta.wiktionary.org ஐ தரவுத்தளமாக பயன்படுத்து வகையில் நாம்
சொல்லகராதி மென்பொருட்களை எழுதமுடியும்.

மேலும் வாரம் ஒருநாள் நம் குழுவிலுள்ளவர்கள் தமிழ் விக்ஸனரி உள்ளீடும் நாளாக
கடைபிடிக்கலாம். அந்த நாளில் மொழிபெயர்க்கும் பணிகளுக்குப் பதிலாக இதுவரை
மொழிபெயர்த்த வார்த்தைகளை தமிழ் விக்ஸனரியில் உள்ளிடலாம். இதன் மூலம் தமிழ்
விக்ஸனரி பலப்படும், அதனால் வருங்கால தமிழ்கணினி முயற்சிகளுக்கு வலுவான
அடித்தளம் நாம் இட முடியும்.

2. உபுண்டு மற்றும் மற்ற திறவூற்று மென்பொருட்களை கல்லூரி மற்றும் பள்ளிகளில்
பிரபலபடுத்த முயற்சி எடுக்கவேண்டும். குறிப்பாக அங்குள்ள ஆசிரியர்களுக்கு
இவற்றைப்பற்றி தெரியப்படுத்தவேண்டும்.

அன்புடன்,
முகுந்த்



-- 
Mugunth

http://mugunth.blogspot.com
http://thamizha.com
http://tamilblogs.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061010/80f157de/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list