[Ubuntu_Tamil] Initiative of writer Sujatha..

மு.மயூரன் mmauran at gmail.com
Thu Oct 5 11:34:27 BST 2006


சுஜாதா வினுடைய இந்ந்த திட்டப்பணி சில காலங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
தொடங்கப்பட்ட காலத்தில் இது பெரும் சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருந்ந்தது.
வெங்கட் போன்ற லினக்ஸ் வல்லுனர்கள் சுஜாதாவை விமர்சித்துக்கொண்டிருந்ந்தனர்.

சுஜாதா தன்முனைப்புடன் செயற்படுகிறார்  என்ற பரவலான குற்றச்சாட்டும்
எழுந்ந்தது.

நடந்தது இதுதான்.

தமிழ் கணினி என்ற செயற்றிட்டம் மூலம் லினக்ஸ் வழங்கல் ஒன்றினை முழுக்க முழுக்க
தமிழ் இடைமுகப்புடன் கொண்டுவருவதே நோக்கம்.

இதற்காக KDE, redhat (அப்போது fedora இல்லை) போன்றன தெரிவு செய்யப்பட்டன.
ஏராளமான மாணவர்கள் , ஆர்வலர்கள் சுஜாதா வழிகாட்டலில் கூடி மொழிபெயர்ப்[பு
பணியினை செய்தனர்.

இந்த திட்டத்தின் பெயர்தான் ழ கணினி.

இப்போதும் நீங்கள் எங்களுடைய மொழிபெயர்ப்பு பக்கங்களில் ஏனையவர்களின்
பங்களிப்புக்கள் பகுதியில் தரப்படும் பரிந்துரைகளில் ஒன்றாக ழ கணினி குழு என்ற
பெயரை காணலாம்.

ஆனால், ழ கணினி வந்ததோ என்னவோ, வசீகரன், தினேஷ் போன்ற தனி மனிதர்களது இடையறாத
உழைப்பின் பயனாக மான்ட்ரேக் (தறபோது mandriva) முதல் தமிழ் இயங்குதளம் என்ற
பெயரை தட்டிக்கொண்டது.

கே டீ ஈ இனை பொறுத்தவரை அது மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த முதல் இந்திய மொழி
தமிழ் தான்.


ஏராளமானவர்கள் பலகாலமாக மிகுந்த சிரமங்களுடன் கட்டியெழுப்பிய தமிழ் லினக்ஸ்
பணியினை, தான் செய்தது என்ற தோற்றத்தினை ஏற்படுத்துகிறார் என்பதே சுஜாதா மீது
வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.

ஆனாலும் ழ கணினி திட்டம் பிரயோசனமான பல உற்பத்திகளை செய்திருக்கிறது.
பல வேலைகள் மீளச்செய்யப்பட்டிருக்கின்றன என்பதே பலரதும் கோபம்.

உதாரணமாக ஒப்பன் ஆபீஸ் இனை வேறொரு குழுவும் மொழிபெயர்க்க தொடங்கியிருந்தது.
க்னூ லினக்ஸ் மொழிபெயர்ப்பும் பலரால் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

இவ்வாறு இயங்கும் குழுக்களை சஉஜாதா அறியாமலிருந்தர் என்று கூற முடியாது.

திறந்த ஆணைமூல உலகில் ஒரே பணியை இருவர் வெவ்வேறாக செய்வது forck எனப்படும்
குற்றம்.

இவ்வாறாகவெல்லாம் குற்றச்சாட்டுக்கள் அவர்மீது அடுக்கப்பட்டது.
ழ கணினி காலப்பகுதியை தொடர்ந்து இன்னொரு சர்ச்சை எழுந்தது.

மைக்ரோசொப்ட், சமுதாய கலைச்சொல்திட்டம் என்ற மிக மிக கீழ்த்தரமான
உள்நோக்கங்களையுடைய திட்டத்தினை அறிவித்தது.  அந்த சுரண்டல் திட்டத்தினை சுஜாதா
எதிர்த்தார்.

அதற்குபிறகு சர்ச்சைகள் அடங்கிப்போயின.
ழ கணினியின் உற்பத்திகள் இப்போதும் பிரயோசனப்படுகின்றன. பல வழிகளில்.

பார்க்க

http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401221&edition_id=20040122&format=html


-மு.மயூரன்

On 10/5/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> I donno whether i joked yesterday..that we will have one day a Tamil
> OS... But found this info on Writer sujatha's epatrika ambalam.com...
>
> I have sought an appointment with him thru email provided in this link:-(
> anyone from this team know him? know anyone knowing him?
>
> And Jeremy Wagstaff said that his column on Wall Street Journal's asia
> edition will be published this friday...
>
> Visit this link...
>
> http://www.ambalam.com/tamilpc.html
>
> --
> அன்புடன்,
> Aamachu
>
> Stepwise instructions - to view Unicode Tamil text
>
> 1. You need to have Unicode Tamil fonts installed on your computer and the
> Operating System capable of rendering Tamil Scripts. Windows XP comes with a
> Unicode Tamil Font (Latha) and you need not download/install a unicode font.
>
> 2. In the Control Panel, in Regional/Languages Options you will need to
> ensure that Indic/Asian Language option is checked.
> 3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape
> 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default
> font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts may be
> downloaded from http://www.tamilnation.org/fonts/latha.ttf
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061005/f5c1d838/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list