[Ubuntu_Tamil] உபுண்டுவில் தமிழ்த் தளங்களை பார்க்க உதவி

Sethu skhome at gmail.com
Mon Oct 2 03:22:38 BST 2006


மயூரன்

> சேது,
>
> மிக்க நன்றி.
> இன்றைக்கு உங்களை சந்திக்க முடியாமற்போய்விட்டது.
> ஓய்வு கிடைக்கும்போது எனக்கு அழைப்பு தாருங்கள். அநேகமாக வரும் வாரங்கள் நான்
> ஓய்வாகவே இருப்பேன்.

சந்திக்க முடியாமல் போனதிற்கு நான்தான் மன்னிப்பு கோர வேண்டும். கடந்த
வெள்ளிக்கிழமை தொ.பே. இல் சனி அல்லது ஞாயிறு  சந்திக்க முடியுமா என நான்
கேட்டுவிட்டு நேரம் பற்றீ நானே பின்னர் தொ.பே மூலம் சொல்வதாகவும்
கூறியிருந்தேன்.  அவ்வண்ணம் இரு நாட்களும் பல  காரணங்களினால்
சந்திப்புக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனதை, நான்  நேற்று தங்களுக்கு
தொ.பே மூலம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அவ்வண்ணம்
செயாததுக்கு தற்போது  மன்னிப்பு கேட்கிறேன்.

> என்னுடைய ஆவரங்கால் விசைப்பலகையையும் சேர்த்து 9சில மேம்படுத்தல்களுடன்)
> m17n-db பொதி ஒன்றினை உருவாக்கியிருக்கிறேன்.
>
> தமிழ் 99 இனையும் அந்த பொதியினுள் சேர்த்துவிடுகிறேன்.
>
> உங்களுக்கு நினைவிருக்கிறதா, உபுண்டு தரும் m17n, scim தொடர்பான பொதிகளின்
> பதிப்புக்கள் தமக்கிடையே ஒத்திசைவானவை அல்ல.
> நாங்கள் மூலத்திலிருந்து  நிறுவிக்கொண்டோம்.

உபுண்டுவின் எந்த ஒரு <இதன் தமிழாக்கம் என்ன?> repository இலும் m17n
பொதிகளை எப்போதும் அவர்கள் கொடுக்கவில்லையே?.

தற்போதைய Dapper உடன் m17n tar ball பொதிகளிலிருந்து  configure, make,
make install என்ற 3-step மூலம் நிறுவுவதில் ஒரு பிரச்சினையும் இல்லை.

முன்னர் Breezy இல் தான் m17n நிறுவ முடியாமல் இருந்தது என்பது என் அனுபவம்.

>
> இந்த பிரச்சனை அடுத்த உபுண்டுவில் வராமலிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
> edgy இன் அண்மைய சோதனைப்பதிப்பு உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் சோதனை செய்து
> பார்க்கமுடியுமா/
>

இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை. தங்களிடம் CD அல்லது DVD பிரதி உள்ளதா?
பதிலை sms மூலம் சொன்னால் போதும்.

> வாசுதேவன் பல சோதனைகளை செய்து இங்கே அறிவித்தார்.

ஆம் - இன்னும் வாசிக்க  வேண்டியுள்ளது
>
>
> ரவிசங்கர் தான் பயன்படுத்திய எ-கலப்பை விசைப்பலை gtk im இலிருக்கும் தமிழ் 99
> விசைப்பலகையை காட்டிலும் மேலதிக வசதிகள் கொண்டிருக்கிறது என்பதுபோல்
> மடலிட்டிருந்தார். அதுதான் குழப்பமாக இருக்கிறது.
>
தமிழ் 99 வி.பா. அமுலாக்கத்தில் பலரது வித்தியாசங்கள் மேலதிக வசதிகளைப்
பொருத்த வரைதான் - அடிப்படை விசைப்பலகை வடிவமைப்பில் (layout) யாவரும்
ஒருமித்தமாகவே உள்ளனர்.

ஆனால் 99 இனைய கருத்தரங்குப்பின் தமிழக அரசின் பிரதம செயலரின் தமிழ்99
வி.ப. வுக்குகான சுற்றறிக்கையில், அம்மானிில அரசு  நியமங்கள் படி   அவ்
வெல்லா மேலதிக வசதிகளையும்  (சும்மர் 12 சட்டங்கள் என்று நினைக்கிறேன்)
உட்கொண்டிருக்க வேண்டும் என்பதே அரசாணை.

இவைகள் சம்பந்தமாக அவைகளின் வெப் தளங்கலோடு எனது சில மாறுபட்ட
கருத்துக்களையும் பின்னர் எழுதுகிறேன்.

> how to தயாரிப்பது தொடர்பான உங்கள் முயற்சிக்கு நன்றி.
> நானும் என்னால் முடிந்த விஷயங்களை அதில் சேர்க்க முயல்கிறேன்.
>

நன்றி - தி. வா கூறியிருபது போல நான் ஆங்கிலத்தில் முதலில் எழுதுவது
இலகு, கால தாமதமும் குறையும் - அவ்வாறே செய்யவுள்ளேன்

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list