[Ubuntu_Tamil] உபுண்டுவில் தமிழ்த் தளங்களை பார்க்க உதவி

மு.மயூரன் mmauran at gmail.com
Sun Oct 1 15:57:03 BST 2006


வாருங்கள் ரவி,

இங்கே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

நான் உங்களுக்கு சொல்லியிருந்தபடி, gtkim இல் வரும் தமிழ் 99 விசைப்பலகை
சரியானதில்லையா?  அதற்கும் ஏ கலப்பை பயன்படுத்தும் தளக்கோலத்துக்கும்
வித்தியாசம் இருக்கிறதா?

தமிழ் 99 விசைப்பலகையை பழகி வைத்திருக்கும் நீங்கள் அந்த விசைப்பலைகை அதன்
சரியான வடிவத்தில் லினக்சில் பயன்படுத்த முடியாமற்போவதென்பது
வருத்தத்துக்குரியது.
தமிழின் தரப்படுத்தப்பட்ட விசைப்பலகையை நீங்கள் எங்கும் பயன்படுத்தத்தக்கதாக
இருக்கவேண்டும்.
ஏ கலப்பையிலுள்ள விசைப்பலகை தளக்கோலம் எந்த வகையில் வித்தியாசப்படுகிறது என்பதை
தெரிவிக்கவும்.

அத்தோடு,

சேது,

scim இல் தமிழ் 99 விசைப்பலைகை வடிவம் இல்லையா?


-மு.மயூரன்

On 10/1/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> as i dont have much time and my tamil typing is slow i reply in english.
>
> On 10/1/06, Ravi shankar <ravidreams_03 at yahoo.com > wrote:
> >
> >  வணக்கம்,
> >
> > என் கணினியில் உபுண்டுவை நிறுவிய பின், ஒருங்குறி எழுத்துருவில்
> > அமைந்த தமிழ்த் தளங்களை ஓரளவு பார்க்க முடிகிறது. ஈகார எழுத்துகளை பார்ப்பதில்
> > மட்டும் பிரச்சினை உள்ளது. உலாவி settingகளில் தமிழ் எழுத்துக்களுக்கு
> > sooriyandotcom எழுத்துருவை பயன்படுத்தி வருகிறேன். இப்பிரச்சினை, சரியான
> > western எழுத்துருவை தேர்ந்தெடுக்காததால் வருகிறது என்று மயூரன் சொல்லி
> > இருந்தார். இப்பிரச்சினைகளை களையும் வண்ணம் நீங்கள் கண்டறிந்த எழுத்துரு
> > combinationகள் ஏதும் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.
> >
>
> install greasemonkey and and a script moztxtalignfix
> you can get them by searching mozilla
> or see mayuran's blog for stepwise instructions.
>
> தவிர, ஒருங்குறி எழுத்துக்களால் அல்லாது தனி எழுத்துருக்கள் கொண்டு
> > இயங்கும் விகடன், தட்ஸ்தமிழ் போன்ற தளங்களின் எழுத்துருக்களை
> > இறக்கி நிறுவினாலும், ஒழுங்காக எழுத்துருக்களை காட்ட மாட்டேன் என்கிறது.
> >
>
> install an extension (now called addson) padma
>
> பிறகு, இது வரை எ-கலப்பை தமிழ்நெட்-99 முறையில் தட்டச்சு செய்து வருகிறேன்.
> > இந்த விசைப்பலகை வசதி உபுண்டுவில் இல்லாதது பெருங்குறையாக
> > இருக்கிறது. பெரும்பாலான விண்டோஸ் பயனர்கள் எ-கலப்பைக்கு பழகியிருப்பதால்
> > அதற்கான லினக்ஸ் நிறுவல் பதிப்பு ஒன்றை உருவாக்க முனைந்தால் நன்றாக இருக்கும்.
> > உபுண்டு உரை பதிப்பானில் தமிழ்நெட்99 விசைப்பலகை முறையை தெரிந்தெடுக்க முடியும்
> > என்றாலும், அதற்கும் எ-கலப்பை முறைக்கும் நுணுக்கமான வேறுபாடுகள் உள்ளன.
> > எ-கலப்பை முறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டவை. தவிர, லினக்ஸ் சாராத
> > ஓபன்ஆபிஸ் மென்பொருள்களில் எ-கலப்பையை நிறுவாமல் தமிழ்நெட்99 முறையில்
> > தட்டச்ச முடியாதிருக்கிறது.
> >
>
> better change to unicode to avoid future problems.moym
> i cant type fast but i have picked up a reasonable speed in two months
> since i started.
> i use a clear kbd skin with letters written over them.
>
> இது போன்று பிரச்சினைகள் இருக்கும் வரை எவ்வளவு தான்
> > உபுண்டுவை விரும்பினாலும் தமிழை வாசிக்க, எழுத விண்டோசை நாட வேண்டி இருக்கிறது.
> > உபுண்டு பயன்பாட்டை பெருக்குவதில் இவை தடைகளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
> > இதற்கான தீர்வுகள் ஏற்கனவே இருக்கும்பட்சத்தில் தயவுசெய்து அதை அனைவரும்
> > எளிமையாக அறியத்தக்க வண்ணம் உபுண்டு தமிழ்விக்கி
> > தளத்தில் தெரிவிக்கவும். தீர்வு இல்லாத பட்சத்தில் அடுத்தடுத்த பதிப்புகளில்
> > இது குறித்து சீர் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
> >
>
> the wiki is young yet.
> you will see more help in near future.
>
> நான் மென்பொருள் வல்லுனன் இல்லையென்பதால் தனிப்பட்ட முறையில் இது குறித்து
> > எந்த உதவியும் செய்ய இயலாமல் இருப்பதற்கு வருந்துகிறேன்
> >
> why?
> i am an anesthetist.
> i do translations
> only criterian is the enthu.
> nothing else
>
> tv
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061001/4a658195/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list