[Ubuntu_Tamil] உதவி தேவை

Ravi shankar ravidreams_03 at yahoo.com
Sun Oct 1 11:01:35 BST 2006


அனைவருக்கும் வணக்கம்.

உபுண்டு தமிழாக்கக் குழுவில் புதிதாக இணைந்துள்ளேன். இதற்கு முன்னர் இது போன்ற மென்பொருள் தமிழாக்கக் குழுக்களில் பங்கெடுத்ததில்லை. எனவே, நீங்கள் சரளமாக பேசிக்கொள்ளும் po file போன்றவைகள், வழிமுறைகளை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது. என்னைப் போன்று புதியவர்களுக்கு எங்கிருந்து எப்படி தமிழாக்கபணிகளைத் தொடங்குவது என்பது போன்ற எளிமையான உதவிக் குறிப்புகளை நம்
 உபுண்டு தமிழ் விக்கி தளத்தில் தந்தால் நன்றாக இருக்கும். உடனடியாக செய்து தர இயலாவிட்டாலும், இது போன்ற உதவிக் குறிப்புகள் வருங்காலத்தில் இத்திட்டத்தில் இணையும் பலருக்கும் உதவியாக இருக்கும்.

launchpadல் சில தமிழாக்கங்களை செய்துள்ளேன். அது சரியான வழிமுறை தானா என்று தெரியவில்லை. மேற்படி வழிகாட்டல்களை யாரேனும் தந்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,
ரவி
 
----------------------------------------
 
Ravishankar,
Ph.D Researcher,
CML-IE
P.O.Box 9518
2300 RA Leiden
The Netherlands 
 
Contact number: +31 71 5275557 (Lab) or +31 630 888998 (mobile) +31 71 8909129 (home)

-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061001/f259ab9e/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list