[உபுண்டு_தமிழ்]Translation Guidelines - Making

senthil raja senthil.nkkl at gmail.com
Sat Nov 11 14:48:21 GMT 2006


மயூரன் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.  மொழிபெயர்ப்புக்கு முன்
மென்பொருளை உப்யொகித்து பார்ப்பது, இன்னும் அதிக ஈடுபாட்டை வளர்க்கும்.   எனது
சமீபத்திய அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்.

ரெட் ஹாட் லினக்சை நான் இது வரை ஆங்கிலத்தில் தான் உப்யொகித்திருக்கிறேன்.
ஒரு வாரத்துக்கு முன், தமிழ் மொழியை configure செய்து உப்யொகிக்கும்போதுதான்
மொழிப்யர்ப்பின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொண்டேன்.

மயூரன் சொல்வது போல், ஒரு மென்பொருளை உபயோகித்தால்தான், மொழிபெயர்ப்பு சிறப்பாக
அமையும்.

-செந்தில் ராஜா.


On 11/10/06, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>
> //your antipathy to microsoft should not stand in the way of
> translations//
>
> இல்லை ராமதாஸ், நான் சொன்னது விளக்கப்போதாமையை ஏற்படுத்தியிருக்கிறது என்று
> நினைக்கிறேன்.
>
> வின்டோசை பயன்படுத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.  நான்
> மைக்ரோசொப்டுக்குதான் விமர்சனங்களை முன்வைக்கிறேன். அப்பாவி பயனர்களில்
> எனக்கென்ன கோபம்?
>
> நான் சொன்னது,  ஒரு மென்பொருளை மொழிபெயர்க்கமுன் அதை ஒருமுறையாவது
> பயன்படுத்திப்பார்ப்பது நல்லது. எங்கே எந்த சொல் வருகிறது என்பதை அவதானித்து
> மொழிபெயர்க்க வேண்டும்.. வருகின்ற இடத்தை பொறுத்து கலைச்சொற்களும் மாறுபடலாம்.
>
> இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் தரமுடியும் தேடி எடுக்க இன்றைக்கு
> நேரமில்லை.
>
> என் இயங்குதளத்தை தமிழ் இடைமுகப்போடு நீண்டகாலமாக பயன்படுத்திவருபவன் என்ற
> அடிப்படையில், கிடைத்த அனுபவங்களின் வாயிலாகவே இதனைச்சொல்கிறேன்.
> காலப்போக்கில் நீங்களும் கூட எனது இந்த முடிவுக்கு வரலாம். வருவீர்கள்.
>
>
>
> -மு.மயூரன்
>
>
> --
> visit my blogs
> http://www.mauran.blogspot.com
> http://www.tamilgnu.blogspot.com
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061111/7869e0cc/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list