[உபுண்டு_தமிழ்]KDE தமிழாக்கம்

amachu shriramadhas at gmail.com
Wed Dec 6 02:10:58 GMT 2006


வணக்கம்,

உபுண்டு வை  தமிழாக்கத் துவங்கிய பின்னர் தான், மொழிபெயர்ப்புக்கு
உபுண்டுவால் பயன்படுத்தப் ரொசெட்டாவிலுள்ள பிரச்சனைகள் அறியப் பெற்றோம்.

அதன் பின்னர் செயலிகளின் தோற்றவிடத்தே (Upstream) தமிழாக்கம் செய்வது
உசிதம் என IRC உரையாடல்களில் முடிவு செய்தோம்.

KDEக்கான பொறுப்பை ஏற்பதாக உரியவரிடன்
தெரியப் படுத்தியவுடன் அதற்கான அனுமதியும் கிடைக்கப் பெற்றோம்.

http://l10n.kde.org/team-infos.php?teamcode=ta

இதிலுள்ள சாதகமான விஷயம், நாம் செய்யும் பணி உபுண்டு மட்டும் அல்லது சூசே,
மாண்ட்ரிவா, பெஃடோரா  போன்ற மற்றைய க்னூ/ லினக்ஸ் வழங்கள்களிலும் கிடைக்கப்
பெறும்.

http://l10n.kde.org/stats/gui/trunk/ta/index.php முகவரியில் கொடுக்கப்
பட்டுள்ள செயலிகளில் ஒன்றை தேர்வு செய்து, பதிவிறக்கி தமிழாக்கி எமது
முகவரிக்கு அனுப்பி வைத்தால் பதிவேற்றுகிறேன்.

தமிழாக்கத்திற்கு செய்ய வேண்டிய முறையான வழிமுறைகளை முதலில் தமிழில்
தொகுக்க வேண்டும்.

பார்க்க: http://l10n.kde.org/docs/translation-howto/

இது குறித்த தங்களின் கருத்துக்களை  அறிய விழைகிறோம்.


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----





More information about the Ubuntu-l10n-tam mailing list